டமஸ்­க­ஸில் தாக்­கு­தல்; 24 பேர் உயிரிழப்பு!

டமஸ்­கஸ் அருகே ஆயு­தக் குழுக்­க­ளின் பகு­தியை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளில் 10 குழந்­தை­கள் உட்­பட அப்­பாவி மக்­கள் 24 பேர் கொன்று குவிக்­கப்­பட்­ட­னர்.

சிரி­யா­வில் அதி­பர் பஷார் அல் அசாத்­தைப் பதவி விலக வேண்­டும் என்று வலி­யு­றுத்தி அர­சுக்கு எதி­ராக ஆயுதக் குழு போரிட்டு வரு­கி­றது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அங்கு உள்­நாட்­டுப் போர் நடை­பெற்று வரு­கி­றது.

இந்த நிலை­யில் சிரி­யத் தலை­ந­கர் டமஸ்­க­ஸில் நேற்­று­முன்­தி­னம் நடத்­தப்­பட்ட குண்­டு­வெ­டிப்­பில் 24 பேர் உயி­ரி­ழந்­த­னர். அவர்­க­ளில் 10 பேர் குழந்­தை­கள் என்று தெரி ­விக்­கப்­பட்­டுள்­ளது.

You might also like