சிப்பாயின் மனிதாபிமானம்!!

விபத்தில் சிக்கிய நபரது உயிரைக் காப்பற்றப் பேராடியதுடன், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும் பொலிஸாருக்கு அடையாளம் காட்டிக் கொடுத்துள்ளார் இராணுவச் சிப்பாய் ஒருவர்.

இந்தச் சம்பவம் தெமட்டகொடப் பகுதியில் இன்று நடந்தது. இராணுவ பயிற்றுவிப்புப் பணியகத்தில் சேவையாற்றும் 11 ஆவது இலங்கை சமிக்ஞைப் படையணியைச் சேர்ந்த மனதுங்க என்பவரே இந்த மனிதாபிமானச் செயலைச் செய்துள்ளார்.

வீதியை கடக்க முற்பட்ட தேங்காய் வியாபாரியின் தள்ளு வண்டியை , வேகமாக வந்த கார் மோதித்தள்ளியது. அதில் தேங்காய் வியாபாரி படுகாயமடைந்தார்.

சம்பவத்தை நேரில் கண்ட சிப்பாய், அந்த நபரை; மருத்துவமனையில் சேர்ப்பித்ததுடன், விபத்தை ஏற்படுத்திய காரின் இலக்கத்தைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினார்.

கொழும்பு போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட வியாபாரி, விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிப்பாயால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, தெமட்டகொடைப் பொலிஸார் காரின் சாரதியைக் கைது செய்தனர். சிப்பாயின் மனிதாபிமானத்தை பொலிஸ் திணைக்களம் பாராட்டியுள்ளது.

You might also like