விபத்தில் இருவா் படுகாயம்

புதுக்குடியிருப்பு-கிரான்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவா் படுகாயமடைந்தனா்.

ஏறாவூா் நோக்கி வேகமாக பயணித்த பட்டா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் உள்ள மரத்தை மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஏறாவூரைச் சேர்ந்த எம்.ஏ.அஸீர்கான்(வயது-23) மற்றும் வே.நித்தியானந்தம்(வயது-38) ஆகியோா் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

சம்பவம் தொடா்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like