புலிகளின் கானத்தோடு சு.க.பரப்புரை!!

யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று நடத்­தப்­பட்ட சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் பரப்­புரை நிகழ்­வில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின் புரட்­சிப் பாடல்­கள் ஒலிக்­க­வி­டப்­பட்­டன.

யாழ்ப்­பா­ண நக­ரத்­தில் உள்ள தனி­யார் விடுதி ஒன்­றில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் வேட்­பா­ளர் அறி­முக நிகழ்வு நடை­பெற்­றது. அதன் ஆரம்­பத்­தில் இந்­தப் பாடல்­கள் ஒலிக்­க­வி­டப்­பட்­டன.
புலி­க­ளின் கானத்­து­டன் பரப்­புரை நடத்­தப்­பட்­டமை தொடர்­பில் பல்­வேறு தரப்­பி­ன­ரும் கருத்­துக்­கள் வெளி­யிட்­டு­ வ­ரு­கின்­ற­னர்.

இந்­தச் சம்­ப­வம் தெற்கு அர­சி­ய­லி­லும் பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. தெற்கு அர­சி­யல்­வா­தி­கள் இது தொடர்­பான கருத்­துக்­களை வெளி­யிட ஆரம்­பித்­துள்­ள­னர்.

அதே­வேளை, விடு­த­லைப் புலி­கள் அமைப்பின் தலை­வர் வே.பிர­பா­க­ர­னின் உரு­வப்­ப­டத்­து­டன் சமூக வலைத் தளங்­க­ளில் புத்­தாண்டு வாழ்த்­துத் தெரி­வித்­த­னர் என்ற குற்­றச்­சாட்­டில் இரு இளை­ஞர்­கள் சில தினங்­க­ளுக்கு முன்­னர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­னர். அவர்­கள் கொழும்பு நீதிவான் மன்­றில் முற்படுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் ­­வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

You might also like