தேர்­தல் வன்­மு­றை­கள் வடக்­கில் குறைவு!!

கபே நிறை­வேற்று அதி­காரி கீர்த்தி தென்­னக்­கோன் தெரி­விப்பு

வடக்கு மாகா­ணத்­தில் தேர்­தல் வன்­மு­றை­கள் குறை­வா­கப் பதி­வா­கி­யுள்­ளன. யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் மிகக் குறை­வா­கவே பதி­வா­கி­யுள்­ளன என்று தெரி­வித்­தார் தேர்­தல் கண்­கா­ணிப்பு அமைப்­பான கபே அமைப்­பின் நிறை­வேற்று அதி­காரி கீர்த்தி தென்­னக்­கோன்.

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் சட்­டத் திருத்­தங்­கள் மற்­றும் பெண் பிர­தி­நி­தித் துவம் தொடர்­பாக வேட்­பா­ளர்­க­ளுக்கு தெளி­வூட்­டும் நிகழ்வு நேற்று யாழ்ப்­பா­ணத்­தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­த­தா­வது-,

வடக்கு மாகா­ணத்­தில் பெண்­கள் அதி­க­மாக உள்­ள­னர். நாடு முழு­வ­தும் நடக்­கும் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் 25 வீத­மான பெண்­கள் உள்­ள­டங்க வேண்­டும் என்ற கோரிக்கை சரி­யா­னது. இந்­தத் தேர்­தல் நல்­ல­தொரு மாற்­றத்­தைக் கொண்­டு­வ­ரும். 60 ஆண்­டு­க­ளா­கச் செய்­யப்­ப­டாத வேலை­கள் இந்­தத் தேர்­த­லில் நடக்­கும் என்று நம்­பு­கின்­றேன்.- என்­றார்.

புதிய தேர்­தல் சட்­டத்­தின் படி 60 வீதம் வட்­டா­ரம் ,40வீதம் விகி­தா­சா­ரம் என்ற அடிப்­ப­டை­யில் தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ளது. வட்­டா­ரங்­க­ளில் வெற்றி பெறும்­பட்­சத்­தில் மேல­தி­க­மாக 8 ஆச­னங்­கள் பிரித்து வழங்­கப்­ப­டும். ஒரு வட்­டா­ரத்­தில் குறைந்­தது மூன்று வாக்­க­ளிப்பு நிலை­யங்­கள் இருக்­கும்.

வாக்­கு­கள் எண்­ணும் போது கட்சி சார்­பாக நிய­மிக்­கப்­ப­டு­வர்­கள் நல்ல துடிப்­பான நப­ராக இருக்க வேண்­டும். வாக்­கு­கள் எண்­ணப்­ப­டும் போது ஒரு வாக்­கு­கள் முறை இல்­லா­மல் நிரா­க­ரிக்­கப்­பட்­டா­லும் அதனை போராடி பெற­வேண்­டும். உங்­க­ளுக்கு எந்த வாக்­க­ளிப்பு நிலை­யத்­தில் அதிக வாக்­கு­கள் கிடைக்­கும் என்­பதை தெரிந்து கொண்டு அந்த வட்­டா­ரத்­தில் முறை­யான பரப்­புரை நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட வேண்­டும்.

தேர்­தல் விதி­மு­றை­கள் மீறல் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டால் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். 7 வரு­டங்­க­ளுக்கு வேட்­பா­ள­ரின் குடி­யு­ரிமை பறிக்­கப்­ப­டும். முன்­னைய தேர்­த­லைப் போன்று வாக்­குப் பெட்­டி­கள் நேரம் தாழ்த்தி வேறு இடத்­துக்கு கொண்டு சென்று எண்­ணப்­பட மாட்­டாது. பி.ப. 4 மணிக்கு தேர்­தல் நிறை­வ­டை­யும் பி.ப. 4.15 க்கு வாக்­கு­கள் எண்­ணப்­ப­டும் என்­பன போன்ற விட­யங்­கள் வேட்­பா­ளர்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டன.

You might also like