மன்னாரில் 3 கோடி ரூபா மதிப்­புள்ள கேர­ளக் கஞ்சா சிக்­கி­யது!!

மன்­னார், முச­லி­யில் 356 கிலோ கேர­ளக் கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது என்று மன்­னார் போதைப் பொருள் தடுப்­புப் பிரி­வுப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கைப்­பற்­றப்­பட்ட கஞ்­சா­வின்  பெறு­மதி சுமார் 3 கோடியே 56 இலட்­சம் ரூபா­வுக்கு அதி­கம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

முசலி பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்­பட்ட காயக்­குழி கிரா­மத்­தில் நேற்­று­முன்­தி­னம் நள்­ளி­ரவு கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

“கடற்­ப­டை­யி­ன­ருக்கு இர­க­சி­யத் தக­வல் கிடைத்­தது. கடற்­ப­டை­யி­னர், சிலா­பத்­துறை பொலிஸ் அதி­கா­ரி­கள், மன்­னார் போதைப் பொருள் தடுப்­புப் பிரி­வுப் பொலி­ஸார் இணைந்து தேடு­தல் நடத்­தி­னர். பொதி செய்­யப்­பட்­டி­ருந்த கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது. வேறு இடத்­துக்கு அதை கொண்டு செல்ல ஆயத்­தப்­ப­டுத்­திய நிலை­யில் காணப்­பட்­டது. அவை தற்­போது சிலா­பத்­து­றைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. மேல­திக விசா­ர­ணை­கள் தொடர்­கின்­றன.”- என்று மன்­னார் போதைப் பொருள் தடுப்­புப் பிரி­வுப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like