பதவி ஆசை இல்லை – மைத்திரி!!

அரச தலை­வர் பத­விக்கு ஆசைப்­பட்டு நான் போட்­டி­யி­ட­வில்லை. எனது நோக்­க­மும் அது கிடை­யாது. இந்­தப் பத­வியை விட்­டுக் கொடுக்­காது பிடித்­துக் கொண்­டி­ருக்க வேண்­டிய அவ­சி­ய­மும் இல்லை. நாம் முன்­னெ­டுக்­கும் திட்­டங்­களை எனது பத­விக் காலத்­தி­னுள் செய்து முடிக்க முடி­யுமா என்­பதை உறுதி செய்து கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. அதற்­கா­கவே நீதி­மன்றை நாடி­னேன்.

இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தார்.
சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான மாபெ­ரும் மக்­கள் சந்­திப்பு நேற்று வெள்­ளிக்­கி­ழமை திஸ்­ஸ­ம­கா­ராம என்.ரி.தயா­னந்த விளை­யாட்டு மைதா­னத்­தில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் இடம்­பெற்­றது. அங்கு உரை­யாற்­றும்­போதே இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்ததாவது:-

நான் பார­பட்­ச­மின்றி செயற்­ப­டு­வ­தையே நோக்­க­மா­கக் கொண்­டி­ருக்­கின்­றேன். நபர்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுப்­ப­தில்லை. எந்த நப­ரா­க­வும் இருக்­க­லாம். எந்­தக் கட்­சி­யா­க­வும் இருக்­க­லாம். எந்த இன­மா­க­வும், மத­மா­க­வும் இருக்­க­லாம். அத­னைப் பற்றி எனக்கு கவ­லை­யில்லை. யார் தவ­றி­ழைக்­கின்­றார்­களோ அவர்­க­ளுக்­கான தண்­ட­னையை வழங்­கு­வ­தற்­கான சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு என்­றும் நான் தடை­யாக இருந்­த­தில்லை. அவ்­வாறு என்­றும் இருக்­கப்­போ­வ­து­மில்லை. யாரை­யும் காப்­பாற்ற வேண்­டிய அவ­சி­யம் எனக்கு கிடை­யாது.

ஒரு விட­யத்­தைச் சரி­யா­கப் புரிந்து கொள்­ளுங்­கள். நான் அரச தலை­வர் பத­வியை ஆசைப்­பட்டு இந்­தப் பத­விக்கு போட்­டி­யி­ட­வில்லை. அது எனது நோக்­க­மும் கிடை­யாது. இந்­தப் பத­வியை விட்­டுக் கொடுக்­காது பிடித்­துக்­கொண்­டி­ருக்க வேண்­டிய அவ­சி­ய­மும் எனக்­குக் கிடை­யாது.

என்­னு­டைய பத­விக்­கா­லம் தொடர்­பாக நான் நீதி­மன்­றத்­தி­டம் கோரிய வியாக்­கி­யா­னம் சம்­பந்­த­மாக அண்­மைய நாள்­க­ளாக பல்­வேறு கருத்­துக்­கள் பகி­ரப்­பட்டு வரு­கின்­றன. எனக்கு முன்­னைய அரச தலை­வர்­கள் இவ்­வாறு நீதி­மன்­றத்­தின் நிலைப்­பாட்டை அறிந்து கொள்­வ­தற்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தார்­கள். அவர்­க­ளுக்­கும் தமது பத­விக்­கா­லம் சம்­பந்­த­மாக பிரச்­சி­னை­கள் இருந்­த­போது அத்­த­கைய வியாக்­கி­யா­னங்­களை உயர் நீதி­மன்­றத்­தி­டத்­தில் கோரி­யி­ருக்­கின்­றார்­கள். அதற்­கான பதி­வு­கள் உள்­ளன.

உயர்­நீ­தி­மன்ற, மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் ஆராய்ந்து வழங்­கும் எந்­தத் தீர்ப்­பை­யும் நான் ஏற்­றுக்­கொள்­ளத் தய­ரா­கவே இருக்­கின்­றேன். ஐந்து ஆண்­டு­களா அல்­லது ஆறு ஆண்­டு­களா என்­பது எனக்கு ஒரு பிரச்­சினை கிடை­யாது. அரச தலை­வர் கதி­ரையை பாது­காத்­துக்­கொண்டு எனது பத­வியை தக்­க­வைப்­பது எனது நோக்­க­மல்ல. என்­னு­டைய பத­வியை இன்று வேண்­டு­மா­னா­லும் விட்­டு­விட்டு மக்­க­ளு­டன் மக்­க­ளாக மக்­கள் சக்­தி­யாக அணி திரள்­வ­தற்கு நான் தய­ரா­கவே இருக்­கின்­றேன் – என்­றார்.

You might also like