சுதந்­தி­ரக் கட்­சி­யும் ஈழத்­துக்கு ஆத­ரவா?- நாமல்!!

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி தமி­ழீ­ழத்தை – தனி­நாட்டை அங்­கீ­க­ரித்து விட்­டதா என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் புதல்­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ச, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் வேட்­பா­ளர் அறி­மு­க­மும், தேர்­தல் அறிக்கை வெளி­யீ­டும் யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று நடை­பெற்­றது. இதில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் புரட்­சிப் பாடல் ஒலிக்க விடப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்­பில் தனது கீச்­ச­கத்­தில் நாமல் ராஜ­பக்ச பதி­விட்­டுள்­ளார்.

‘சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி வேட்­பா­ளர் நிகழ்­வில் தமி­ழீ­ழப் பாடல்­கள் ஒலிக்­க­வி­டப்­பட்­டுள்­ளன. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் இத­னூ­டாக தனி நாட்டை – தமி­ழீ­ழத்தை அங்­கீ­க­ரித்­துள்­ள­னரா?’ என்று அவர் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

You might also like