புரட்­சிப் பாடல் ஒலித்­தமை தேர்­தல் விதி­முறை மீறலே- கபே அமைப்பு

தேர்­தல் பரப்­பு­ரை­க­ளில் தடை செய்­யப்­பட்ட அமைப்­புக்­க­ளின் கொடி­கள், சின்­னங்­கள் என்­ப­வற்றை உப­யோ­கிப்­பது சட்­ட­வி­ரோ­த­மா­னது. அது தேர்­தல் விதி­மு­றை­களை மீறும் செயல் என்று கபே அமைப்­பின் நிறை­வேற்று அதி­காரி கீர்த்தி தென்­னக்­கோன் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­ போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று நடை­பெற்ற சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் பரப்­புரை நிகழ்­வில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின் புரட்­சிப் பாடல் ஒலிக்­க­வி­டப்­பட்­டி­ருந்­தது. அது தொடர்­பில் ஊட­க­வி­யா­ளர்­கள் கேள்வி எழுப்­பி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்­ளார்.

You might also like