மாண­வர்­க­ளின் மோத­லுக்கு – அர­சி­யல் கார­ண­மல்ல!!

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்கு இடை­யி­லான மோத­லின் பின்­ன­ணி­ யில் எந்த அர­சி­யல் கார­ண­மும் இல்லை என்று அனைத்துப் பீட மாண­வர் ஒன்­றிய தலை­வர் கிருஷ்­ண­மே­னன் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் அவர் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போதே இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்ததா­வது:-

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் க­ழக கலைப்­பீட 4 ஆம் மற்­றும் 3ஆம் வருட மாண­வர்­க­ளுக்கு இடை­யில் நேற்­று­முன்­தி­னம் ஏற்­பட்ட மோத­லுக்கு பின்­னால் எந்த அர­சி­யல் கார­ணி­க­ளும் இல்லை. மாண­வர்­க­ளின் மோத­லின் பின்­ன­ணி­யில் அர­சி­யல் கார­ணங்­கள் உண்டு என்று சில தவ­றான கருத்­துக்­கள் வெளி­வ­ரு­கின்­றன.

அவற்­றில் எந்த உண்­மை­யும் இல்லை. தேர்­தல் காலம் என்­ப­த­னால் வேறு பிரச்­சி­னை­யாக மாண­வர்­க­ளின் மோதல் சம்­ப­வத்­தைத் திசை திருப்­பச் சிலர் முயற்சி செய்­கின்­ற­னர்.

மாண­வர்­க­ளுக்கு இடை­யில் ஏற்­பட்ட கருத்து முரண்­பாடே மோத­லுக்கு கார­ணம். தற்­போது மோதல் தொடர்­பில் பல்­க­லைக் கழக நிர்­வா­கம் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. தவ­றி­ழைத்த மாண­வர்­க­ளுக்கு எதி­ராக விசா­ர­ணை­க­ளின் பின்­னர் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.

இரா­ம­நா­தன் நுண்­க­லைப்­பீ­டம் , சட்­டத்­துறை மற்­றும் 1ஆம் , 2ஆம் வருட கலைப்­பீட மாண­வர்­க­ளுக்­கான விரி­வு­ரை­கள் நடை­பெ­று­கின்­றன. – என்று அவர் தெரி­வித்­தார்.

You might also like