கிடைத்த சந்­தர்ப்­பத்தை நழு­வ­வி­டக் கூடாது- காதர் மஸ்­தான்

இந்­தத் தேர்­தலை கட்­சி­யின் தேர்­த­லா­கவோ அல்­லது பிர­தே­சங்­களை அபி­வி­ருத்தி செய்­வற்­கான தேர்­த­லா­கவோ மட்­டு­மன்றி ஒரு அரிய சந்­தர்ப்­ப­மாக நோக்­குங்­கள் என நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் காதர் மஸ்­தான் தெரி­வித்­தார்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் சார்­பில் முல்­லைத்­தீவு மாவட்ட துணுக்­காய் பிர­தேச சபை­யின் மல்­லாவி 5 ஆம்­வட்­டா­ரத்­தில் போட்­டி­யி­டும் ம.தெய்­வேந்­தி­ர­னை­யும் சு.உமா­தே­வி­யை­யும் ஆத­ரித்து நேற்று நடை­பெற்ற பரப்­பு­ரைக் கூட்­டத்­தி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது;-

நீண்ட கால­மாக எவ்­வித அபி­வி­ருத்­தி­யும் செய்­யப்­ப­டா­மல் எல்­லா­வி­தங்­க­ளி­லும் புறக்­க­ணிக்­கப்­பட்ட இந்­தப் பிர­தே­சங்­க­ளும் அபி­வி­ருத்­தியைக் காண­வேண்­டிய தேவை இருக்­கி­றது.

எமது பகுதி அபி­வி­ருத்­திக்­காக தமிழ்­மக்­க­ளின் ஏகப் பிர­தி­நி­தி­கள் என – தம்மை அழைத்­த­வர்­கள் எந்த அபி­வி­ருத்­தி­யை­யும் முன்­னெ­டுக்­க­வில்லை. என­வே­தான் எமது பகுதி அபி­வி­ருத்தி, எமது எதிர்­கா­லம் என்­ப­வற்றை கருத்­திற்­கொண்டு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யில் இணைந்து போட்­டி­யிட முடி­வெ­டுத்­தேன் – என்­றார்.

You might also like