அபிவி­ருத்­தி­யு­டன் கூடிய உரி­மையே அவ­சி­யம் – அங்­க­ஜன்

உரி­மை­யைக் காகி­தத்­தில் மட்­டும் வைத்­துக் கொண்டு என்ன செய்ய முடி­யும்?. எமது மக்­க­ளுக்கு அபி­வி­ருத்­தி­யு­டன் கூடிய உரி­மையே தற்­போது அவ­சி­யம். இவ்­வாறு தெரி­வித்­தார் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான அங்­க­ஜன் இரா­ம­நா­தன்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் அறிக்கை வெளி­யீ­டும், வேட்­பா­ளர் அறி­முக நிகழ்­வும் நேற்று யாழ்ப்­பா­ணம் நக­ரத்­தில் உள்ள விடுதி ஒன்­றில் நடை­பெற்­றது. அதில் உரை­யாற்­றும்­போதே நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்த­தா­வது-:

மக்­க­ளுக்­குச் சேவை செய்­யும் எண்­ணத்­து­டன் பலர் பல இடங்­க­ளில் இருந்து எமது கட்­சிக்கு வந்­துள்­ள­னர். அதற்­குக் கார­ணம் நாங்­கள் சரி­யான பாதை­யில் செல்­வதே. தற்­போ­தைய கால கட்­டத்­தில் தமிழ் தலை­மை­கள் கூறு­வ­தற்­கும் மக்­கள் எதிர்­பார்ப்­ப­தற்­கும் இடை­யில் வேறு­பா­டு­கள் காணப்­ப­டு­கின்­றன.

எமது சமூ­கத்­தில் தற்­போது போதைப் பொருள் பாவனை கலா­சா­ரச் சீர்­கே­டு­கள், வேலை­யில்­லாப் பிரச்­சி­னை­கள் என்­பன காணப்­ப­டு­கின்­றன. இவை எமது இருப்­பையே கேள்­விக்கு உள்­ளாக்­கி­யுள்­ளன. வேலை­யில்­லாப் பிரச்­சினை தொடர்­பில் சம்­பந்­தன் எது­வும் செய்ய முடி­யாது என சொல்­கின்­றார். அரச தலை­வர் சட்­டத்­த­ரணி பதவி பெற்­றுக்­கொ­டுக்க முடி­கின்­றது.

கடந்த உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் தமக்கு வாக்­க­ளி­யுங்­கள் எனக் கோரி பல சபை­களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கைப்­பற்­றி­யது. ஆனால் அவர்­கள் எதனைச் செய்­தார்­கள்?. நாம் மக்­க­ளின் கிரா­மிய அபி­வி­ருத்­தி­யை­யும், முன்­னேற்­றத்­தை­யும் மேற்­கொள்ளத் தயா­ரா­கவே இருக்­கின் றோம். அதற்குத் தேவை­யா­ன­வற்றைச் செய்ய நாம் தயா­ரா­கவே இருக்­கின்­றோம் – என்­றார்.

வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யில், காணா­மல் போனோர்­க­ளின் குடும்­பத்­துக்கு உத­வு­தல், போரி­னால் பாதிக்­கப்­பட்ட பெண் தலை­மைத்­துவக் குடும்­பங்­க­ளுக்கு சுய­தொ­ழில் வாய்ப்பு ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தல், நக­ர­சபை மற்­றும் மாந­கர சபை வளங்­க­ளைப் பயன்­ப­டுத்தி தொழில் வாய்ப்­புக்­களை இளை­ஞர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தல், அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­ டுத்­தல் போன்ற விட­யங்­கள் உள்­ள­டக்­கப்­பட்­டன.

You might also like