பிணை­முறி மோசடி அறிக்கை மீது- சட்­டமா அதி­பர் கழு­குப்­பார்வை!!

தீவி­ர­மாக ஆராய்­கி­றது சிறப்புக்குழு

மத்­திய வங்கி பிணை­முறி மோச­டி­யு­டன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு எதி­ராக எந்தச் சட்­டப் பிரி­வின்­கீழ், எத்­த­கையை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது என்­பது தொடர்­பாக சட்­டமா அதி­பர் திணைக்­க­ளம் தீவி­ர­மாக ஆராய்ந்து வரு­கின்­றது என அறி­ய­மு­டி­கின்­றது.

இதற்­காக அமைக்­கப்­பட்­டுள்ள விசேட குழு, வெளி­நாட்டு சட்­ட­திட்­டம் சம்­பந்­த­மா­க­வும் கவ­னம் செலுத்­தி­யுள்­ளது என­வும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ரணை நடத்­திய ஜனா­தி­பதி ஆணைக்­குழு தனது இறுதி அறிக்­கையை கடந்த டிசெம்­பர் மாதம் 30 ஆம் திகதி ஜனா­தி­ப­தி­யி­டம் கைய­ளித்­தது.

ஆயி­ரத்து 400 இற்­கும் மேற்­பட்ட பக்­கங்­க­ளைக்­கொண்ட மேற்­படி அறிக்­கை­யின் உள்­ள­டக்­கங்­களை மையப்­ப­டுத்தி ஜனா­தி­ப­தி­யால் அண்­மை­யில் விசேட அறி­விப்­பொன்று விடுக்­கப்­பட்­டது. அத்­து­டன், குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் அறி­விக்­கு­மாறு கோரி குறித்த அறிக்கை சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

இதன்­பி­ர­கா­ரமே அறிக்கை தொடர்­பில் சட்­டமா அதி­பர் திணைக்­க­ளம் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கின்­றது என்­றும், விரை­வில் அது தொடர்­பில் ஜனா­தி­ப­திக்கு அறி­விக்­க­வுள்­ளது என்­றும் அரச தரப்புத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மோசடி இடம்­பெற்­ற­தா­கக் கரு­தப்­ப­டும் காலப்­ப­கு­தி­யில் மத்­திய வங்கி ஆளு­ந­ரா­கச் செயற்­பட்­ட­வர் வெளி­நாட்­டுப் பிரஜை என்­ப­தால் சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தி­லுள்ள சிக்­கல் நிலைமை குறித்­தும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இருக்­கின்ற சிறப்­பு­ரி­மை­கள் பற்­றி­யும் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது.

You might also like