ஆசை யாரைத்தான் விட்டது?

அரச தலை­வ­ரா­கத் தனது பத­விக் காலம் எப்­போது முடி­வ­டை­கின்­றது என்று உயர் நீதி­மன்­றத்­தி­டம் கருத்­துக் கேட்­டி­ருக்­கி­றார் மைத்­தி­ரி­பால சிறி­சேன. அவ­ரது இந்த முடிவு ஆச்­ச­ரி­யத்­தை­யும் விச­னத்­தை­யும் ஒருங்கே ஏற்­ப­டுத்­து­கின்­றது.

நிறை­வேற்று அதி­கா­ரம் கொண்ட அரச தலை­வர் பத­வியை இல்­லாது ஒழித்து புதிய நாட்­டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான இடைத் தர­க­ரா­கத்­தான் மைத்­தி­ரி­பால சிறி­சேன 2015ஆம் ஆண்டு பத­விக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டார்.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­சவை ஆட்­சி­யி­லி­ருந்து அகற்­றும் அதே­நே­ரம் நாட்­டின் சாபக்­கே­டாக மாறி­யி­ருக்­கும் நிறை­வேற்று அரச தலை­வர் முறை­மையை ஒழிப்­ப­தற்­கா­க­வும்­தான் அந்­தப் பதவி பற்­றிய எண்­ணம் ஏது­மற்­றி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தார்.

ஐக்­கிய தேசி­யக் கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு என்­ப­ன­வும் அத­ன­டிப்­ப­டை­யி­லேயே மைத்­தி­ரிக்கு ஒரு­மித்த ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­தன.

ஆரம்­பத்­தில், தான் மற்­றொரு பத­விக் காலத்துக்கு ஆசைப் படப் போவ­தில்லை என்று மைத்­திரி திரும்­பத் திரும்­பக் கூறி­வந்­தார். தேர்­த­லில் மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­தது போல இந்­தப் பத­விக் காலத்­து­ட­னேயே தான் பத­வி­யில் இருந்து அகன்­று­வி­டு­வார் என்­றும் அவர் வாக்­கு­று­தி­ய­ளித்­தார்.

எனி­னும் சிறிது காலத்­தின் பின்­னர் இந்த நிலைப்­பாட்­டில் அவர் தொடர்ந்­தும் உறு­தி­யாக இருக்­கி­றாரா என்­கிற சந்­தே­கம் எழவே செய்­தது.

கட்சி அர­சி­யல் இடை­யில் புகுந்­து­கொண்ட நிலை­யில் இந்த விவ­கா­ரம் ஆரம்­பத்­தில் இருந்­தது போன்ற தெளி­வான நிலை­யில் தொட­ர­வில்லை என்­பது தெரிந்­தது. நாடா­ளு­மன்­றத்தை ஐக்­கிய தேசி­யக் கட்சி தனது கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருக்­கும் நிலை­யில் அதனை ஈடு­செய்­யும் வகை­யில் அரச தலை­வ­ரின் அதி­கா­ரங்­கள் குறைக்­கப்­ப­டக்­கூ­டாது என்­கிற கருத்து சுதந்­தி­ரக் கட்­சி­யி­ன­ரி­டம் இருந்து கிளம்­பத் தொடங்­கி­யது.

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான பேச்­சுக்­க­ளில்­கூட இந்த நிலைப்­பாட்­டையே சுதந்­தி­ரக் கட்சி தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கி­றது என்­ப­தை­யும் கவ­னித்­தா­க­வேண்­டும்.

இதன் விளை­வாக 19ஆவது சட்­டத் திருத்­தம் நிறை­வேற் றப்­பட்­ட­போது அரச தலை­வர் மைத்­தி­ரி­பால பத­வி­யில் இருக்­கும் வரைக்­கும் அவ­ரி­டம் சில பல அதி­கா­ரங்­கள் இருக்­கத்­தக்க வகை­யில் சட்ட ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

அத­ன­டிப்­ப­டை­யில் புதிய அரச தலை­வ­ரின் பத­விக் காலம் 5 ஆண்­டு­கள் மட்­டுமே என்­ப­தும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது. அப்­போது இது தொடர்­பில் எது­வும் பேசா­தி­ருந்த அரச தலை வரும் தற்­போது தனது பத­விக் காலம், திருத்­தத்­துக்கு முன்­ன­ரான அர­ச­மைப்­புப்­படி 6 ஆண்­டு­களா அல்­லது 5 ஆண்­டு­களா என்று உயர் நீதி­மன்­றி­டம் கேட்­கி­றார்.

இவ­ருக்கு முன்­னர் இந்­தப் பத­வி­யி­லி­ருந்­த­வர்­க­ளான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமார ரண­துங்­க­வும் மகிந்த ராஜ­பக்­ச­வும்­கூட நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறை­மையை ஒழிப்­ப­தா­கக்­கூ­றித்­தான் பத­விக்கு வந்­தார்­கள். ஆனால், கடைசி வரை­யில் அத­னைச் செய்­ய­வில்லை. அத­னால்­தான் அந்­தப் பத­வியை இல்­லா­மல் செய்­யும்­போது அந்­தப் பதவி குறித்த எதிர்­பார்ப்பு ஏது­மின்­றி­யி­ருந்த மைத்­திரி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார்.

ஒரு மாற்­றத்தை நிகழ்த்­தும் பொது மனி­த­ரா­கவே அவர் இந்­தப் பத­விக்கு அழைத்து வரப்­பட்­டார். அது அவர் அந்­தப் பத­வி­யில் ஆசைப்­ப­ட­மாட்­டார் என்­கிற எதிர்­பார்ப்­பின் பேரி­லேயே நடந்­தது. ஆனால், அந்த எதிர்­பார்ப்­பு­கள் இப்­போது பொய்த்­துப்­போய்­விட்­டன.

மேலும் ஓர் ஆண்டு பத­வி­யில் நீடிக்­கும் ஆசை மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வந்­து­விட்­டது. கட்சி அர­சி­ய­லின் நெருக்­கடி யால் அவர் இந்த முடி­வுக்கு வந்­தார் என்று கார­ணம் கற்­பிக்­கப்­ப­டக்­கூ­டும். எந்­தக் கார­ண­மாக இருந்­தா­லும் பதவி ஆசை வந்த பின்­னர் அது ஒரு­வரை எப்­படி ஆட்­டிப் படைக்­கும் என்­பதை இந்த நாடு இரு அரச தலை­வர்­க­ளின் காலத்­தில் பார்த்­து­விட்­டது.

எனவே மைத்­தி­ரி­யின் இந்த ஆசை­யும் என்­னென்ன விப­ரீ­தங்­களை ஏற்­ப­டுத்­துமோ என்­கிற அச்­சத்­தைத்­தான் ஏற்­ப­டுத்­து­ கின்­றது.

You might also like