கூட்டு ஆட்சித் தலைவர்களது வாக்குறுதிகளின் கதி என்னாச்சு?

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் எட்­டாம் திகதி நாட்­டில் நடை­பெற்ற அரச தலை­வர் தேர்­த­லில் முன்­னாள் அர­ச­த­லை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வைத் தோற்­க­டித்து பொது எதி­ரணி வேட்­பா­ள­ரா­ன மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ்­மற்­றும் முஸ்­லிம் மக்­க­ளின் அதி­கப்­ப­டி­யான ஆத­ரவு வாக்­கு­க­ளால் பெரு வெற்­றி­யீட்டி அர­ச­த­லை­வ­ரா­கப் பத­வி­யேற்று மூன்று ஆண்­டு­கள்  கழிந்­து ­விட்­டன.

வடக்கு– கிழக்கு மாகா­ணங்­க­ளில் உள்ள தமிழ் மக்­கள் மகிந்­த­ரா­ஜ­பக்ச அரசை வௌியேற்றி மாற்­றத்­தைக் கொண்டு வர வேண்­டும் என்ற நோக்­கு­டன் மைத்­தி­ரி­பா­ல­வுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர்.ஆட்சி மாற்­றம் ஏற்­பட்டு, ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யும் ஒன்­றி­ணைந்து நல்­லாட்சி என்ற பெய­ரில் கூட்டு அரசு பொறுப்­பேற்று 100 நாள் வேலைத்­திட்­ட­மும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

கூட்டு அர­சுக்கு தமிழ்­ தே­சி­யக் ­கூட்­ட­மைப்­பும் விரும்­பியோ,விரும்­பா­மலோ தனது ஆத­ரவை இன்­று­வரை வழங்கி வரு­கின்­றது. மூன்று வரு­ட­கால ஆட்­சி­மு­டி­வ­டைந்து அரசு தனது நான்­கா­வது வருட ஆட்­சியை ஆரம்­பித்­துள்ள நிலை­யில், தமிழ்­மக்­க­ளின் இனப்­பி­ரச்­சினை மற்­றும் அடிப்­ப­டைப்­பி­ரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு விட­யத்­தில் மைத்­திரி அரசு ஆர்­வம் காட்­டாது புறம் போக்­கா­கவே நடந்து வரு­கி­றது என்­ப­தில் எள்­ள­ள­வும் சந்­தே­க­மில்லை.

சி்ங்கள மக்­க­ளை­யும் படை­யி­ன­ரை­யும் திருப்­திப்­ப­டுத்­தும் நோக்­கில் செயற்­ப­டுகிறது கூட்டு அரசு

கூட்டு அரசு பெரும்­பான்மை சிங்­கள மக்­க­ளை­யும், படைத்­த­ரப்­பை­யும் திருப்­திப்­ப­டுத்­து­வ­தி­லும், பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­ட­மி­ருந்­து எழு­கின்ற கேள்­வி­க­ளுக்கு முரண்­பா­டான பதில்­களை வழங்­கு­வ­தி­லும் இன்­று­வரை காலத்­தைக் கடத்­திக் கொண்­டி­ ருக்­கின்­றது. தமிழ்­மக்­க­ளின் உரி­மை­களை மறுத்­து­வ­ரும் கூட்டு அரசு , சமூ­கத்­தின் மத்­தி­யில் தனது போலி முகத்­தைக் காட்டி பன்­னாட்­டுச் சமூ­கத்­தை­யும் ஏமாற்றி வரு­வ­தாக தமிழ்­மக்­கள் முற்று முழு­தாக நம்­பு­கின்ற நிலை­யில், தற்­போ­தைய கூட்டு அரசு மீதான நம்­பிக்­கை­யை­யி­ழந்து தமிழ் மக்­கள் விரக்­தி­யின் விளிம்­புக்கே சென்­று­விட்­டுள்­ள­னர்.

இலங்கை அர­சி­ய­லில் கொழும்பு ஆட்­சி­யா­ளர்­கள் தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வே­தும் காணாது அதனை இழுத்­த­டிக்க முயல்­வ­தும், காலத்­தைக்­க­டத்­தி­வ­ரு­வ­தும், தமிழ்­மக்­க­ளுக்கு இந்­த­நாட்­டில் என்­ன­தான் பிரச்­சினை இருக்­கி­றது என்று கேள்வி கேட்­ப­தும், புதி­ய­ வி­ட­யங்­க­ளல்ல.

70 ஆண்­டு­க­ளாக மாறி மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற ஐக்­கிய தேசி­யக்­கட்சி, மற்­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி அர­சு­கள், எப்­படி தங்­கள் இஷ்­டம் போல் தமி­ழர்­கள் பிரச்­சி­னை­க­ளைக் கையாண்­டார்­களோ அதைப் போன்றே கூட்டு அர­சும் அந்­தப் போக்­கி­லேயே நடந்து வரு­கின்­றது.

கூட்டு அர­சின் நிர்­வா­கத்­தில் தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னைக்கு விமோ­ச­னம் கிடைக்­கும். புதிய அரசு மூலம் தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு காணப்­ப­டும் என தமிழ்த்­த­லை­மை­கள் எவ்­வ­ள­வு­தான் எடுத்­துக்­கூ­றி­னா­லும் தமிழ் மக்­கள் எந்த ஆட்­சித்­த­ரப்­பி­ன­ரை­யும் நம்­பத் தயா­ரில்லை என்­பதை இந்­தக் கூட்டு அர­சின் மூன்று வரு­ட­கால ஆட்சி தெட்­டத்­தௌி­வாக உணர்த்தி வைத்­துள்­ளது.

இந்த அர­சில் அங்­கம் வகிக்­கும் அமைச்­சர்­க­ளின் செயற்­பா­டு­க­ளும், பேச்­சுக்­க­ளும் தமிழ்­மக்­களை ஏமாற்­று­வ­தும், குழப்­பு­வ­து­மா­கவே இருக்­கின்­றன. கடந்த வரு­டம் தமிழ்­மக்­கள் காணா­மல் போன தம­து­உ­ற­வு­கள் தொடர்­பில் கண்­ட­றிந்து உண்மை நிலை­யைச் சொல்­லுங்­கள் எனக் கேட்டு போராட்­டங்­களை வரு­டம் முழு­வ­தும் பல­கோ­ணங்­க­ளில் நடத்­தி­யி­ருந்­த­னர். பூர்­வீக நிலங்­களை விடு­விக்­காது அரச படை­கள் அவற்­றைத் தமது கட்­டுப்­பாட்­டுக்­குள் வைத்­துக் கொண்டு இருப்­பது எந்த வகை­யில் நியா­யம் எனக்­கேட்­டும் சாத்­வீ­கப் போராட்­டங்­க­ளைச் சளைக்­காது முன்­னெ­டுத்­தி­ருந்­த­னர்.

இன்­ன­மும் விடு­விக்­கப்­ப­டாத நிலை­யில் பல ஏக்­கர் காணி­கள் படை­யி­னர் வசம்

இன்­றைய கூட்டு அர­சா­னது பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் அழுத்­தம் காரணமாக முல்­லைத்­தீவு, மன்­னார், யாழ்ப்­பா­ணம் போன்ற மாவட்­டங்­க­ளில் படை­யி­னர் ஆக்­கி­ர­மித்­தி­ருந்த காணி­க­ளில் சில­வற்றை விடு­வித்­தி­ருந்­தா­லும், இன்­ன­மும் பொது­மக்­க­ளது பல­நூற்­றுக்­க­ணக்­கான ஏக்­கர் காணி­கள் படை­யி­ன­ரின் ஆக்­கி­ர­மிப்­பில் உள்­ளன. படை­யி­னரோ, தேசி­ய­பா­து­காப்பு கருதி அக்­கா­ணி­களை மக்­க­ளி­டம் திருப்­பிக்­கொ­டுக்­க­ மு­டி­யாது எனக் கையை விரிக்­கின்­ற­னர். படை­யி­னர் தேசிய பாது­காப்­பைக் கார­ணம் காட்டி தமிழ் மக்­க­ளின் காணி­க­ளில் விவ­சா­யம் செய்­கின்­ற­னர். வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளி­லும் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

தமிழ் மக்­கள் பூர்­வீ­க­மாக வாழ்ந்த பரம்­பரை நிலங்­களை படை­யி­னர் தம­து­ட­மை­யாக்­கிக் கொண்டு அவற்றை கடந்த பல ஆண்­டு­கள் கால­மாக கைய­கப்­ப­டுத்தி வைத்­தி­ருப்­பது, விடு­விக்­கா­மல் சொந்­தம் கொண்­டா­டு­வது பெரும் மனித உரிமை மீறல் என்று தமிழ் மக்­கள் தரப்­பு­கள் மட்­டு­மன்றி பன்­னாட்­டுச் சமூ­க­மும் தீவி­ர­மா­கக் குற்­றம் சாட்டி வரு­கின்­றன.

இன்­றைய கூட்டு அரசு, பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு தேவை­யான அடிப்­படை வச­தி­களைச் செய்து கொடுக்­கத்­த­வ­றி­விட்­டுள்­ள­து­டன் பாதிக்­கப்­பட்ட தமிழ்­மக்­க­ளின் நியா­ய­மான போராட்­டங்­கள்­கு­றித்து அக்­கறை காட்டி செயற்­ப­ட­வும் தவறி விட்­டுள்­ளது. 30 வரு­ட­கா­லப்­போர் கார­ண­மாக, பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­கள் போர் முடி­வுக்கு வந்த பின்­ன­ரும் கூட இயல்பு வாழ்க்­கைக்­குத் திரும்­ப­மு­டி­யா­மல் ஏக்கப் பெருமூச்­சு­டன் முகாம்­க­ளி­லும் பிற இடங்­க­ளி­லும் தொடர்ந்­தும் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்­டிக்­கின்­ற­னர்.

இந்­தப் புதிய ஆண்­டி­லா­வது தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னை­யைத் தீர்க்க கூட்டு அரசு அக்­கறை காட்­டுமா?

மலர்ந்­தி­ருக்­கும் இந்­தப்­பு­திய ஆண்­டி­லா­வது கூட்டு அரசு தமிழ்­மக்­க­ளின் அடிப்­ப­டைப்­பி­ரச்­சி­னை­க­ளைத் தீர்த்து வைக்­கத்­த­வ­றி­னால், அது மக்­களை மிகுந்த விரக்தி நிலைக்கு இட்­டுச்­செல்­வ­து­டன், அரசு மீதான வெறுப்­பு­ணர்­வை­யும் ஏற்­ப­டுத்­தும். இவை­யா­வும் தவிர்க்க முடி­யா­த­தாகி விடும்.

ஏற்­க­னவே இந்தக் கூட்டு அரசு மீது தமிழ்­மக்­கள் நம்­பிக்­கை­யி­ழந்து வரு­கின்ற நிலை­யில், மைத்­தி­ரி­பால சிறி­சேன எந்த முகத்­து­டன் தமிழ் மக்­க­ளைச் சந்­திப்­பார்? இந்­தக் கூட்டு அர­சால் தமிழ்­மக்­க­ளுக்கு எந்தவித­மான விமோ­ச­ன­ மும் கிடை­யாது என்ற முடி­வுக்கு தமிழ் மக்­கள் வரு­வ­தும் தவிர்க்­க­ மு­டி­யா­த­தா­கி­வி­டும்.

முன்னை நாள் ஜனா­தி­ப­தி­யான சந்­தி­ரிகா குமா­ர­துங்க போர் முடி­வுக்கு வந்து எட்டு வரு­டங்­கள் கழிந்த நிலை­ யி­லும், அர­சால் தமிழ்­மக்­க­ளது மனங்­களை வெல்ல முடி­ய­வில்­லை ­யென கடந்த தமிழ்– சி்ங்கள புத்­தாண்டு தினத்­தை­யொட்­டித் தாம் கலந்து கொண்ட நிகழ்­வொன்­றில் வைத்­துக்­கு­றிப்­பிட்­டி­ருந்­தார். போர்­கா­ர­ண­மாக விரக்­தி­யுற்ற தமிழ் மக்­க­ளது உள்­ளங்­க­ளைச் சீர் செய்­யும் பணி­களை இன்­றைய கூட்டு அரசு செய்து வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டி ­ருந்த போதி­லும், யதார்த்­தத்­தில் அத்­த­கைய சமிக்ஞை எத­னை­யும் காண முடி­ய­வில்லை.

கூட்டு அர­சின் மூன்று ஆண்­டு­கால நிர்­வா­கத்­தில் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளில் எவை­தான் சீர்­செய்ய்ப்­பட்­டி­ருக்­கின்­றன? காணா­மல் போனோர் விட­யத்­தில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சந்­தி­ரிகா குமா­ர­துங்க என்ன கூறி­னார்­கள் என்­பதை மறந்­து­விட்­ட­னரா தமிழ்­மக்­கள்? அர­ச­த­லை­வர், தலைமை அமைச்­சர், முன்னை நாள் அர­ச­த­லை­வர் சந்­தி­ரிகா போன்­றோர் கூட்டு ஆட்சி அர­சின் மூன்று ஆண்டு கால நிர்­வா­க த்­தில் யாழ்ப்­பா­ணத்­துக்­குப் பல தட­வை­கள் வந்து திரும்­பி­யி­ருந்த போதி­லும் அவர்­க­ளால் தமிழ் மக்­க­ளின் மனங்­களை வெல்­ல­மு­டிந்­ததா?

இன்­றைய கூட்டு அர­சும் சிறு­பா ன்­மை­யி­ன­ரான தமிழ்­மக்­க­ளுக்கு எந்­த­வி­த­மான உரி­மை­க­ளை­யும் வழங்­கி­வி­டக்­கூ­டாது என்­ப­தில் தென்­னி­லங்­கை­யி­லுள்ள கடும் இனம் வாதப்­போக்­கா­ளர்­க­ளும், மகிந்த தரப்பு அணி­யி­ன­ரும் நெருக்­க­டி­க­ளைக் கொடுத்து வரும் நிலை­யில், கூட்டு அரசு இப்­ப­டிப்­பட்ட நெருக்­க­டி­க­ளைத்­தூக்­கி­யெ­றிந்து விட்டு தமிழ்­மக்­க­ளின் பிரச்­சி­னை­களை துணிச்­ச­லோ­டும், நேர்­மை­யோ­டும் தீர்த்து வைப்­ப­தற்கு தனது மிகுதி ஆட்­சிக்­கா­லம் ­மு­டி­வ­டை­வ­தற்கு முன்பாக முன்­வ­ருமா? என்ற கேள்வி தமிழ் மக்­கள் மத்­தி­யில் எழுந்­தா­லும், மைத்­திரி அரசு வழங்­கிய வாக்­கு­று­தி­கள் ஒன்று கூட இது­வ­ரை­யில் பூர­ண­மாக நிறை ­வேற்­றப்­பட்­ட­தில்லை என்ற உண்மை பூதா­கா­ர­மா­கத் தலை­தூக்கி நிற்­கி­றதே? தமிழ் மக்­க­ளின் மனி­தா­பி­மான சிறிய தேவை­க­ளைக்­கூடக் கையாள முடி­யாது  இன்­றைய கூட்டு அரசு பின் வாங்கி வரு­கின்­றதோ என்ற அச்­சம், கவலை தமிழ்­மக்­கள் மத்­தி­யில் நிறை­யவே உள்­ளன.

பரப்­பு­ரைக்கு வட­ப­கு­திக்கு வரும் அரச தலை­வர் வழ­மை­யான
வாக்­கு­று­தி­யையே அவிழ்த்­து­வி­டப் போகி­றார்

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் பரப்­பு­ரைக்­காக வட பகு­திக்கு வர­வி­ருக்­கின்ற அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், தலைமை அமைச்­சர் ரணில்­விக்­கி­ர­ம­சிங்­க­வும் தமிழ்­மக்­க­ளின் பிரச்­சி­ னை­கள் தொடர்­பாக என்ன சாக்­குப்­போக்கு, நொண்­டிச் சாட்­டுக்­களை முன்­வைத்து தம்­மைத் தக்க வைத்­துக் கொள்­ளப் போகின்­ற­னரோ என்ற கேள்வி தமிழ் மக்­கள் மத்­தி­யில் தலை­தூக்கி நிற்­கி­றது.

ஆனா­லும் முழுப்­பூ­ச­ணிக் கா­யைச் சோற்­றில் புதைப்­பது போன்று, ஏதா­வது புனை­க­தை­களை இட்­டுக்­கட்டி தமிழ்­மக்­கள் காது­க­ளில் பூச்­சுற்றித் தத்­த­மது தரப்­பு­க­ளுக்­கான வாக்கு வேட்­டையை இவர்­கள் முன் னெ­டுக்­கத்­தான் போகின்­றார்­கள். அந்த வகை­யில் அவர்­க­ளது வழ­மை­யான பொய் வாக்­கு­று­தி­க­ளுக்கு தாளம் போட எமது தரப்­பி­லும் ஒரு கூட்­டத்­தி­னர் தயா­ராக உள்­ள­னர் என்­பது தான் நிதர்­ச­னம்.

தமிழ் மக்­க­ளின் தற்­போ­தைய அடிப்­ப­டைப்­பி­ரச்­சி­னை­க­ளுக்­கும், அவர்­க­ளால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த நியா­ய­மான போராட்­டங்­க­ளுக்­கும் இன்­றைய கூட்டு அரசு என்ன பதி­லைக் கொடுக்­கப் போகின்­றது. தமி­ழர்­க­ளின் மனதை வெற்­றி­கொள்­ளும் வகை­யில் ஜனா­தி­ப­தி­யின் வருகை அமை­யுமா? அல்­லது ஏமாற்­றம்­தான் மிஞ்­சுமா?

தமிழ் மக்­க­ளின் கடந்த வரு­டப்­போ­ராட்­டங்­க­ளும், வேண்­டு­தல்­க­ளும் இன்­றைய கூட்டு அர­சால் புறந் தள்­ளப்­பட்டே வரு­வ­த­னால், இந்த வரு­ட­மும் தமிழ்­மக்­க­ளின் தொடர் போராட்­டங்­கள் முழு வீச்­சாக முன்­னெ­ழு­வது தவிர்க்க முடி­யா­த­ தா­கும் என்­ப­தில் சந்­தே­கம் கிடை­யாது.

You might also like