சிறுப்­பிட்டி இளை­ஞர்­கள் கொலை வழக்கு: ஏப்­ர­லுக்கு ஒத்­தி­வைப்பு

சிறுப்­பிட்டி இளை­ஞர்­கள் இரு­வர் படு­கொலை செய்­யப்­பட்­டமை தொடர்­பான வழக்கு விசா­ர­ணையை எதிர்­வ­ரும் ஏப்­ரல் 12ஆம் திக­தி­வரை யாழ்ப்­பா­ணம் நீதி­வான் மன்­றம் ஒத்­தி­வைத்­தது.

கடந்த 1997ஆம் ஆண்டு ஒக்ரோ­பர் 28ஆம் திகதி யாழ்ப்­பா­ணம் சிறுப்­பிட்டிப் பகு­தி­யில் படு­கொலை செய்­யப்­பட்ட இளை­ஞர்­க­ளின் பெற்­றோர் வழங்­கிய முறைப்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் 16 இரா­ணு­வத்­தி­னரை அச்­சு­வேலி பொலி­ஸார் கைது செய்­த­னர்.

அத­னைத் தொடர்ந்து நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணை­க­ளின் பின்­னர் கடந்த 1998ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணம் நீதி­வான் மன்­றம் 16 இரா­ணு­வத்­தி­ன­ருக்­கும் பிணை வழங்­கி­யது.  அதன் பின்­னர் வழக்கு விசா­ர­ணை­கள் இன்றி கிடப்­பில் போடப்­பட்­டி­ருந்­தது. இந்த வழக்கை விசா­ரிக்­கு­மாறு சட்­டமா அதி­ப­ரால் யாழ்ப்­பா­ணம் நீதி­வான் மன்­றுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு அறி­விக்­கப்­பட்­டது.

அத­ன­டிப்­ப­டை­யில் குறித்த வழக்கு மீள விசா­ர­ ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது வழக்­கில் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட 16 இரா­ணு­வத்­தி­ன­ரில் இரு­வர் போரில் உயி­ரி­ழந்தி ருந்தனர். இந்த நிலை­யில் ஏனைய 14 இரா­ணு­வத்­தி­னர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­ட­னர்.

பின்­னர் சட்­டமா அதி­ப­ரின் அறி­வு­றுத்­த­லுக்கு அமை­வாக 9 இரா­ணு­வத்­தி­னர் வழக்­கி­லி­ருந்து விடு­ விக்­கப்­பட்­ட­னர். ஏனைய 5 இரா­ணு­வத்­தி­ன­ருக்­கும் யாழ்ப்­பா­ணம் மேல்­நீ­தி­மன்­றம் கடந்த வரு­டம் பிணை வழங்­கி­யது.

இந்த வழக்கு யாழ்ப்­பா­ணம் நீதி­மன்ற நீதி­வான் சி.சதீஸ்­த­ரன் முன்­னி­லை­யில் நேற்­று­முன்­தி­னம் விசா­ர­ணைக்கு வந்­தது. சந்­தே­க­ந­பர்­கள் 5 பேரும் மன்­றில் முன்­னி­லை­ யா­கி­னர்.
குறித்த வழக்கை முன்­னெ­டுப்­ப­தற்கு மன்­னார் மாவட்ட அரச சட்­ட­வாதி சட்­டமா அதி­ப­ரால் நிய­மிக்­கப்­பட்­டார். அவர் தற்­போது கிழக்கு மாகா­ணத்­துக்கு இட­மாற்­ற­லா­கிச் சென்­றுள்­ளார்.

அத­னால் வேறொரு அரச சட்­ட­வாதி விரை­வில் நிய­மிக்­கப்­ப­டு­வார் என சட்­டமா அதி­பர் திணைக்­க ­ளத்­தால் அறி­விக்­கப்­பட்­டது. எனவே வழக்கு விசா­ர­ணையை வேறொரு திக­திக்கு ஒத்­தி­வைக்­கு­மாறு அச்­சு­வேலி பொலி­ஸார் மன்­றில் விண்­ணப்­பம் செய்­த­னர். பொலி­ஸா­ரின் விண்­ணப்­பத்­தை­ ய­ டுத்து வழக்கு விசா­ரணை ஒத்தி வைக்­கப்­பட்­டது.

You might also like