Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

மரநடுகைத் திட்டம் ஆரம்பம்!

கிளிநொச்சி, பூநகரி பள்ளிக்குடா தொடக்கம் பரந்தன் வரையான பிரதேசத்தில் ஆயி­ரம் மருது மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த வருடத்தில் மர நடுகைத் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு இலங்கை இராணுவம் பிரதான ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.

இதன் ஒரு கட்டமாக மர நடுகை மூலம் இலங்கையில் சௌபாக்கியமான நாடு என்ற திட்டத்தில் 66ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய மரநாட்டு விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பூநகரிப் பிரதேச செயலர், இலங்கை மின்சாரசபை, வன விலங்கு திணைக்கள அதிகாரிகள், ஆகியோர் கலந்து கொண்டு இந்த மர நடுகை திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.