சுவாமி விவே­கா­னந்­த­ரின் பிறந்­த தினம் கடைப்பிடிப்பு!!

சுவாமி விவே­கா­னந்­த­ ரின் 155ஆவது பிறந்­த தின நிகழ்வு வவு­னி­யா­வில் நேற்­றுக் காலை இடம்­பெற்­றது. தொட­ருந்­து நிலைய வீதி­லுள்ள சுவாமி விவே­கா­னந்­த­ரின் நினை­வுத் தூபிக்கு மலர் மாலை அணி­வித்து, மலர் தூவி கடைப்­பி­டிக்­கப்­பட்­ட­து.

வவு­னியா ஹற்­றன் நஷனல் வங்­கி­யின் பங்­க­ளிப்­பில் தமிழ் விருட்­சம் அமைப்­பின் ஏற்­பாட்­டில் இடம்­பெற்­ற நிகழ்­வில் சிறப்­புச் சொற்­பொ­ழி­வை வவு­னியா கலை இலக்­கிய நண்­பர்­கள் வட்­டத் தலை­வர் தமிழ் மணி அக­ளங்­கன் நிகழ்த்­தி­னார்.

நிகழ்­வில் ஹற்றன் நஷனல் வங்­கி­யின் உத்­தி­யோ­கத்­தர்­கள், மாவட்ட கலாசார உத்­தி­யோ­கத்­தர், தமிழ் விருட்­சம் அமைப்­பின் உறுப்­பி­னா்­கள் வவு­னியா சைவப்­பி­ர­காச மக­ளிர் கல்­லூரி மாண­வா்­கள், ஆசி­ரி­யர்­கள் எனப் பல­ரும் கலந்து கொண்­ட­னர்.

 

You might also like