தெ.ஆபிரிக்க அணியை சமாளிக்குமா இந்தியா?

தென்னாபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் ஆட்­டத்­தில் இன்று கள­மி­றங்­கு­கி­றது இந்­திய அணி. இன்­றைய ஆட்­டம் நடக்­கும் செஞ்­சூ­ரி­யன் மைதா­னம் தென்­னா­பி­ரிக்­கா­வுக்­குச் சாத­க­ மா­னது என்­ப­தால் இந்த ஆட்­டத்­தில் இந்­திய அணி தாக்­குப்­பி­டிக்­குமா என்­பது தொடர்­பில் பெரும் எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது.

தொட­ரில் மூன்று ஆட்­டங்­கள். முத­லா­வது ஆட்­டத்­தில் தென்­னா ­பி­ரிக்கா வெற்­றி­பெற்­றது. இரண்­டா­வது ஆட்­டம் இன்று ஆரம்­ப­மா­க­ிறது. இன்­றைய ஆட்­டத்­தில் வெற்­றி­பெற்­றால் அல்­லது குறைந்த பட்­சம் சம­நி­லை­யில் முடித்­தால் மட்­டமே இந்­திய அணி­யால் தொட­ரில் தனது இருப்­பைத் தக்க வைக்க இய­லும்.

இன்­றைய ஆட்­டம் நடை­பெ­றும் செஞ்­சூ­ரி­யன் ஆடு­க­ளம் தென்­னா­ பி­ரிக்­கா­வைப் பொறுத்­த­மட்­டில் மிக­வும் ராசி­யான மைதா­ன­மா­கப் பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்த மைதா­னத்­தில் இது­வரை 22 ஆட்­டங்­களை தென்­னா­பி­ரிக்க அணி எதிர்­கொண்­டுள்­ளது. அவற்­றில் 17 ஆட்­டங் க­ளில் அந்த அணி வெற்­றி­பெற்­றுள்­ளது.

மூன்று ஆட்­டங்­கள் சமநி­லை­யில் முடி­வ­டைந்­தன. இரண்டு ஆட்­டங்­க­ளில் மட்­டுமே தென்­னாபி­ரிக்க அணி தோல்­வி­ய­டைந்­தது. இத­னால் இன்று ஆரம்­ப­மா­கும் இந்த ஆட்­டத்­தில் தென்­னா­பி­ரிக்க அணிக்­கான வாய்ப்பு அதி­கம் உள்­ள­தா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது.

செஞ்­சூ­ரி­யன் ஆடு­கள பரா­ம­ரிப்­பா­ளர் பிரை­யன் பிளாய், ‘‘சிறந்த ஆடு­க­ள­மாக இருக்­கும் வகை­யில் இதைத் தயார் செய்து வரு­கி­றோம். பந்­து­வீச்­சா­ளர்­க­ளும், துடுப்­பாட்ட வீரர்­க­ளும் சம அள­வில் ஆதிக்­கம் செலுத்த வேண்­டும் என்­பதே எங்­க­ளது இலக்கு. தொடக்­கத்­தில் பந்து வீச்­சா­ளர்­க­ளுக்கு ஒத்­து­ழைக்­கும். அதன் பிறகு துடுப்­பாட்ட வீரர்­க­ளுக்­குக் கைகொ­டுக்­கும். பவுன்­சும், வேக­மும் நிச்­ச­யம் இருக்­கும்’ என்று தெரி­வித்­தார்.

மொத்­தத்­தில், இன்­றைய ஆட்­டத்­தில் தென்­னா­பி­ரிக்கா கோலோச்­சு­வதை இந்­திய அணி­யி­னர் தடுத்து நிறுத்த வேண்­டும் என்­றால் அதற்கு ஒரு போரை நடத்த வேண்­டி­யி­ருக்­கும் என்­ப­தில் சந்­தே­க­மில்லை. இரு அணி வீரர்­க­ளும் நேற்றுத் தீவிர பயிற்­சி­யில் ஈடு­பட்­ட­னர்.

You might also like