ஆஸித் தொடரில் நடால் முதலிடம்!

ஆஸ்­தி­ரே­லிய ரென்­னிஸ் தொட­ருக்­கான தரப்­ப­டுத்­த­லில் ஆண்­கள் ஒற்­றை­யர் பிரி­வில் ஸ்பெய்ன் வீரர் நடால் முத­லி­டம் பிடித்­துள்­ளார்.

நடப்பு வரு­டத்­தின் முத­லா­வது பன்­னாட்டு அந்­தஸ்துப் பெற்ற தொட­ராக ஆஸ்­தி­ரே­லி­யத் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­தத் தொட­ருக்­கான தரப்­ப­டுத்­தல் நேற்று வெளி­யி­டப்­பட்டது. நடால் முத­லி­டம் பிடித்­துள் ளார். பெட­ரர் இரண்­டா­வது இடத்­தைப் பிடித்­துள்­ளார்.

கடந்த வரு­டம் பிரெஞ்­சுக் கிண்­ணம் உள்­ளிட்ட பல மகு­டங்­களை நடால் தன­தாக்­கி­யி­ருந்­தார். இத­னால் தரப்­ப­டுத்­த­லில் அவ­ ருக்கு முத­லி­டம் கிடைத்­தது. கடந்த வரு­டத்தை முதல்­தர வீர­ரா­கவே அவர் நிறை­வு­செய்­தார். இதை­ய­டுத்தே நடா­லுக்கு ஆஸ்­தி­ரே­லி­யத் தொட­ருக்­கான தரப்­ப­டுத்­த­லில் முத­லி­டம் கிடைத்­தது.

You might also like