இலங்கை அணி மீது தொடர்கிறது விசாரணை!

இலங்கை அணிக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்று பன்னாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான தொடர் கடந்த வருடம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்றது. ஒருநாள் தொடரில் இலங்கை அணி படுதோல்வியடைந்தது. இதையடுத்து குறித்த தொடரில் ஆட்டநிர்ணயச் சூதாட்டம் இடம்பெற்றது என்று இலங்கை அணியின் முன்னாள் வீரரொருவர் குற்றம் சாட்டியிருந்தார். அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை கிரிக்கெட் சபையின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ஆஸ்லே டி சில்வா, வழங்கிய செவ்வியில் ‘பன்னாட்டு கிரிக்கெட் சபையின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. ஊழல் இடம்பெற்ற மைக்கான எந்த ஆதா ரங்களும் வழங்கப்பட வில்லை’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை பன்னாட்டு கிரிக்கெட் சபை மறுத்துள்ளது. குறித்த குற்றச்சாட்டுத் தொடர்பில் இலங்கை அணி மீது விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்று பன்னாட்டு கிரிக்கெட் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

You might also like