சுற்றுலாப் படகு கவிழ்ந்து – 4 சிறுவர்கள் உயிரிழப்பு!!

11 க்கும் மேற்பட்டோர் மாயம்

மும்பைக் கடலில் பாடசாலைச் சிறுவர்கள் பயணித்த படகொன்று சற்றுமுன்னர்   கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 25 பேர் மீட்கப்பட்டனர். ஏனையவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மும்பையின் தகானு கடற்கரையில் 40 சிறுவர்களுடன் பயணித்த சுற்றுலாப்படகே விபத்துக்குள்ளானது. கடலில் இருந்து 3.7 கி.மீற்றர் தூரத்தில் படகு கவிழ்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

டோர்னியர் வானுர்தி மற்றும் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் சிறுவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

You might also like