விபத்தில் சிறுமி உயிரிழப்பு!!

பேருந்துடன் மோதுண்ட சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து பிங்தெனியப் பிரதேசத்தில் இன்று காலை நடந்தது.

விபத்தில் 7 வயதுடைய சிறுமி உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த பேருந்துடன் சிறுமி மோதுண்டார்.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like