வடக்குக் காணி விடு­விப்­பில்  மைத்­தி­ரி கூறு­வது பொய்!

சார்ள்ஸ் நிர்­ம­­ல­நாதன் எம்.பி. சுட்­டிக்­காட்­டு

வடக்­கில் படை­யி­னர் வசம் இருந்த 80 வீத­மான பொது மக்­க­ளின் காணி­கள் அவர்­க­ளி­டம் மீள கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால வெளி­யிட்­டுள்ள அறிக்கை தொடர்­பில் ஆச்­ச­ரி­ய­மும் ஏமாற்­ற­மும் அடைந்­துள்­­ளோம் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சார்ள்ஸ் நிர்­ம­ல­நா­தன் தெரி­வித்­துள்­ளார்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்­தில் அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள் ளார். அந்­தக் கடி­தத்­தில் குறிப்­பி­­­­டப்­பட் டுள்­ள­தா­வது:

வட மாகா­ணத்­தில் விடு­விக்­கப்பட்­ட­ தாக கூறப்­ப­டும் பொது­மக்­க­ளின் குடி­யி­ருப்­பு­கள் மற்­றும் விவ­சாய காணி­கள் இன்­னும் படை­யி­னர் வசமே உள்­ளன என்­பதை தாழ்­மை­யு­டன் தெரி­யப்­ப­டுத்­து­கி­றேன். இந்த விவ­சாய நிலங்­க­ளுக்கு சொந்­த­மான பொது­மக்­க­ளில்

பலர் தமது வாழ்­வா­தா­ரத்தை இழந்­துள்­ள­னர். வட மாகா­ணத்­தில் பொது­மக்­க­ளின் காணி­க­ளில் படை­யி­னர் ஆடம்­பர ஹோட்­டல்­க­ளை­யும் கட்­டி­யுள்­ள­னர். பொது­மக்­க­ளின் இந்த காணி­களை விடு­விக்க அரச தலை­வர் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்து அதற்­கான முனைப்­பு­களை மேற்­கொள்ள வேண்­டும்.

அப்­போது இந்த காணி­க­ளுக்­கு­ரிய மக்­கள் தமது காணி­க­ளில் அமை­தி­யாக வாழ்க்­கையை கொண்டு நடத்த முடி­யும். அதற்­கான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.

இரா­ணு­வத்­தி­னர் ஆக்­கி­ர­மித்­துள்ள காணி­க­ளின் விவ­ரம்,

கிளி­நொச்சி முழங்­கா­வில் ஆயி­ரத்து 800 ஏக்­கர் மர முந்­தி­ரிகை தோட்­டம், மன்­னார் வெள்­ளாங்­கு­ளம் 500 ஏக்­கர் விவ­சாய பண்ணை, கிளி­நொச்சி முக்­கும்­பம் 100 ஏக்­கர் தென்­னந்­தோட்­டம், முல்­லைத்­தீவு தேரா­வில் ஆயி­ரத்து 200 ஏக்­கர் பொது விவ­சாய பண்ணை, கிளி­நொச்சி வட்­டக்­கச்சி 400 ஏக்­கர் அரச விவ­சாய பண்ணை, முல்­லைத்­தீவு கேப்­பா­பி­லவு 3 ஆயி­ரம் ஏக்­கர் வான்­படை மக்­கள் குடி­யி­ருப்பு, கிளி­நொச்சி முழங்­கா­வில் 800 ஏக்­கர் வான்­ப­டைத் தளம், மன்­னார் முள்­ளிக்­கு­ளம் 600 ஏக்­கர் கடற்­படை தளம், முல்­லைத்­தீவு வட்­டு­வா­கல் 680 ஏக்­கர் இரா­ணுவ முகாம், மன்­னார் சன்­னார் ஆயி­ரத்து 500 ஏக்­கர் இரா­ணுவ முகாம், கிளி­நொச்சி சாந்­த­பு­ரம் 680 ஏக்­கர் விவ­சாய பண்ணை, கிளி­நொச்சி ஜெய­பு­ரம் 120 ஏக்­கர் பொதுப் பண்ணை, கிளி­நொச்சி மலை­யா­ள­பு­ரம் 798 ஏக்­கர் பொதுப் பண்ணை, யாழ்ப்­பா­ணம் வலி­கா­மம் 4 ஆயி­ரத்து 500 ஏக்­கர் மக்­க­ளின் குடி­யி­ருப்பு என்­பன உள்­ளன. – என்­ரறு அந்­தக் கடி­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

You might also like