எதிர்­கால தலை­மு­றை­யி­னரை நல்­வ­ழிப்­ப­டுத்­தும் இத்­த­கைய பண்­டி­கை­கள்

மானிட சமூ­கத்தை நாக­ரி­கத்தை நோக்­கிப் பய­ணிக்க வைப்­ப­தில் உழ­வுத் தொழிலே முக்­கிய கார­ணி­யாக அமைந்­தது என அரச அதி­பா் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தாா்.

தைத் திரு­நாளை முன்­னிட்டு வெளி­யிட்ட பொங்­கல் வாழ்த்­துச் செய்­தி­யில் இத­னைக் குறிப்­பிட்­டாா்.

வாழ்த்­துச் செய்­தி­யில் மேலும் தெரி­வித்­த­தா­வது:

உல­க­வாழ் தமிழ் மக்­க­ளால் இயற்­கைக்கு தமது நன்­றி­யைப் பறை­சாற்­றும் வகை­யில் கடைப்­பி­டிக்­கப்­ப­டும் தைத்­தி­ரு­நாளை முன்­னிட்டு இந்த வாழ்த்­துச் செய்­தியை அனுப்பி வைப்­ப­தில் மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன்.

நவீன தொழில்­நுட்ப வளர்ச்­சி­யால் கிரா­ம­வா­சி­கள் விவ­சா­யத்­தைக் கைவிட்டு, நக­ரங்­களை நோக்கிப் படை­யெ­டுக்­கும் நிலை­யி­லும் பாரம்­ப­ரி­யங்­க­ளு­டன் கொண்­டா­டப்­ப­டும் இத்­த­கைய பண்­டி­கை­கள் மனி­த­னின் கலா­சா­ரம், பண்­பாடு, மனி­த­நே­யம், ஒற்­றுமை, பகிர்ந்­துண்­ணல் போன்ற விழு­மி­யப்­பண்­பு­களை சமூ­கத்­தில் பேண உத­வு­கின்­றது.

இத்­த­கைய செயற்­பா­டு­கள் எதிர்­கால தலை­மு­றை­யி­னரை நல்­வ­ழிப்­ப­டுத்­தும் வகை­யில் பாது­காப்­ப­தற்­கும் வாய்ப்­பாக அமை­கின்­றன. தை பிறந்­தால் வழி பிறக்­கும் என்ற நம்­பிக்­கை­யு­டன் கொண்­டா­டப்­ப­டும் தைத்­தி­ரு­நாள் அனை­வ­ரது வாழ்க்­கை­யி­லும் வளம் பெற வேண்­டும் என பிரார்த்­திப்­ப­ தோடு அனை­வ­ருக்­கும் இனிய தைப்­பொங்­கல் நல்­வாழ்த்­துக்­க­ளைத் தெரி­விக்­கின்­றேன் – – என்­றாா்.

You might also like