தமிழர் துயர் நீங்கட்டும்
தமிழர்களின் துயரங்கள் நீங்கி, சுபீட்சமான வாழ்வு பெற்று வாழ தைத்திருநாளில் வேண்டுவோம். அனைவருக்கும் தித்தி க்கும் தைப் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
தைப்பொங்கலை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் – நன்றி தெரிவிக்கும் திருநாளே தைப் பொங்கல் திருநாள். தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும் என்று இந்த நாளில் இறைவனை வேண்டுவோம்.
அனைவரும் இன்புற்று மகிழ்ச்சியுடன் அனைத்து நலன்களும் பெற்று வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.தித்திக்கும் தைப் பொங்கல் திருநாள் அனைவருக்கும் அமையட்டும் என்று வாழ்த்துகின்றேன் என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.