நல்­லி­ணக்கத்துக்­கான தினம் ரணில் தனது வாழ்த்­தில் தெரி­விப்பு

தமிழ் மக்­க­ளும், ஏனைய சமூ­கத்­தி­ன­ரும் ஒன்­று­பட்டு எதிர்­கால இலங்­கை­யின் சமா­தா­னத்துக்காக உறு­தி­பூ­ணும் ஓர் தேசிய நல்­லி­ணக்க தின­மாக தைப்­பொங்­கல் அமை­கின்­றது, என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். தைத்­தி­ரு­நாளை முன்­னிட்டு அவர் விடுத்­துள்ள வாழ்த்­துச்­செய்­தி­யி­லேயே இந்த விட­யம் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளவை வரு­மாறு,
இலங்கை மக்­க­ளது வாழ்க்­கையை முன்­னேற்­றிச் செல்­லும் இந்­தத் தரு­ணத்­தில் இலங்கை மற்­றும் உல­கெங்­கு­முள்ள தமிழ் மக்­கள் உவ­கை­யு­டன் இன்று தைத்­தி­ரு­நாளை கொண்­டா­டு­கின்­ற­னர்.

பொங்­கல் திரு­நா­ளா­னது மகிழ்ச்­சி­க­ர­மாக நன்றி செலுத்­து­கின்ற மற்­றும் மீள­மைப்புக்­கான மக்­கள் திரு­நா­ளாக அமை­கின்­றது. தமிழ் மக்­க­ளும், ஏனைய சமூ­கத்­தி­ன­ரும் ஒன்­று­பட்டு எதிர்­கால இலங்­கை­யின் சமா­தா­னத்துக்­காக உறு­தி­பூ­ணும் ஓர் தேசிய நல்­லி­ணக்க தின­மாக அமை­கின்­றது.

உல­கத்­தின் மிகப் பழ­மை­யான நாக­ரி­கத்­தைக் கொண்ட தமி­ழர்­கள், உழ­வுத் தொழி­லைப் போற்றி எரு­து­கள், கால்­ந­டை­க­ளுக்­கும், இயற்­கைக்­கும் நன்றி தெரி­விக்­கின்ற வகை­யில் அறு­வ­டைத் திரு­நா­ளைத் தைப்­பொங்­கல் திரு­வி­ழா­வாக நெடுங்­கா­ல­மா­கக் கொண்­டாடி வரு­கின்­ற­னர்.

இயற்­கை­யின் பெறு­மதி சமத்­து­வத்துக்கு மதிப்­ப­ளிக்க வேண்­டி­ய­தன் முக்­கி­யத்­து­வம், நன்றி தெரி­விக்­கும் உய­ரிய பண்பு போன்ற அனைத்து மதங்­க­ளி­ன­தும் மனித நேயக்­க­ருத்­துக்­களை தைப்­பொங்­கல் பண்­டிகை எமக்கு எடுத்­தி­யம்­பு­கின்­றது.
தமி­ழர்­கள், இன மத பேத­மின்றி அனைத்து மக்­க­ளு­ட­னும் ஒன்­றி­ணைந்து தைப்­பொங்­கல் திரு­வி­ழா­வைக் கொண்­டா­டு­த­லா­னது சமா­தா­னம் நல்­லி­ணக்­கத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான முக்­கிய சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

இயற்­கை­யு­டன் தொடர்­பு­றும் போது அதன் பாது­காப்­புக்­காக அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­ப­டு­வ­தற்­கும் இன மத பேதங்­க­ளைத் தாண்டி சமா­தா­னம் சகோ­த­ரத்­து­வம் மேலோங்­கும் மனித சமூ­க­மொன்றை உரு­வாக்­க­வும் இம்­முறை தைப்­பொங்­கல் பண்­டிகை முன்­மா­தி­ரி­யாக அமைய வேண்­டு­மெ­னப் பிரார்த்­திக்­கி­றேன். தைப் பொங்­கல் பண்­டி­கை­யைக் கொண்­டா­டும் சகோ­தர தமிழ் மக்­க­ளுக்கு எனது உளப்­பூர்­வ­மான வாழ்த்­துக்­க­ளைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன் – என்­றுள்­ளது.

You might also like