இலங்கை போன்ற நாடுகள் சீனாவின் பக்கம் சாய்வது ஆபத்து

இந்திய இராணுவத் தளபதி கருத்து

இலங்கை போன்ற நாடு­ கள் சீனாவை நோக்­கிச் செல்­வதை அனு­ம­திக்­கக்கூடாது என்று இந்­திய இரா­ணு­வத் தள­பதி ஜென­ரல் பிபின் ராவத் தெரி­வித்­தார்.
இந்­திய இரா­ணுவ தினத்தை முன்­னிட்டு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

சீனா வலி­மை­யான நாடாக இருக்­க­லாம். ஆனால் இந்­தியா பல­வீ­ன­மான நாடு அல்ல. பாகிஸ்­தான் எல்­லை­யின் மீதுள்ள கவ­னத்தை இந்­தியா சீனா­வின் பக்­க­மும் திருப்ப வேண்­டிய தேவை உள்­ளது.

எமது அயல்­நா­டு­கள் சீனாவை நோக்கி நகர்­வதை அனு­ம­திக்­கக் கூடாது. அய­ல­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கும் கொள்­கையை இந்­திய அரசு காத்­தி­ர­மாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும்.

சீனா­வைக் கையா­ளு­வ­தற்­கான பரந்­து­பட்ட மூலோ­பா­யத்­தின் ஒரு பகு­தி­யாக, நோபா­ளம், பூட்­டான், மியான்­மார், இலங்கை, பங்­க­ளா­தேஷ், ஆப்­கா­னிஸ்­தான் போன்ற நாடு­களை இந்­தியா தன் பக்­கம் தக்­க­வைத்­துக் கொள்ள வேண்­டும்.

இந்த நாடு­க­ளுக்கு தொடர்ந்து ஆத­ர­வ­ளிப்­ப­தற்கு இந்­தியா முழு­மை­யான முயற்­சி­களை எடுக்க வேண்­டும் என்று அவர் அதில் குறிப்­பிட்­டுள்­ளார்.

You might also like