நாடு­க­டந்த அர­சு உறுப்­பி­னர் நாட்­டுக்குள் நுழையத் தடை­!

கட்­டு­நா­யக்க வானூர்தி நிலை­யத்­தில் வந்­தி­றங்­கிய நாடு கடந்த தமி­ழீழ அர­சின் உறுப்­பி­னர் ஒரு­வ­ருக்கு இலங்­கைக்­குள் நுழை­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. நாடு கடத்­தப்­ப­டு­வ­தற்­காக அவர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார் என்று கொழும்பு ஊட­கம் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

சுரேஸ்­நாத் இரத்­தி­ன­பா­லன் (வயது –-48) தனது மனைவி மற்­றும் இரண்டு குழந்­தை­க­ளு­டன் அபு­தாபி வழி­யாக கடந்த வியா­ழக் கிழமை மாலை 3.45 மணி­ய­ள­வில் கட்­டு­நா­யக்க வானூர்தி நிலை­யத்­தில் வந்­தி­றங்­கி­னார்.

குடி­வ­ரவு அதி­கா­ரி­க­ளால் அவர்­க­ளின் கட­வுச்­சீட்­டு­கள் சோத­னை­யி­டப்­பட்ட போது, சுரேஸ்­நாத் இரத்­தி­ன­பா­ல­னின் பெயர் கறுப்­புப்­பட்­டி­ய­லில் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

அவ­ரது குடும்­பத்­தி­னரை இலங்­கைக்­குச் செல்ல அனு­மதி வழங்­கப்­பட்ட போது அவர்­கள், அவ­ரு­ட­னேயே இருக்க முடிவு செய்­துள்­ள­னர்.
திருப்பி அனுப்­பப்­ப­டு­வ­தற்­காக அவர்­கள் வானூர்தி நிலைய இடைத்­தங்­கல் அறை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று வானூர்தி நிலைய அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர் என்று கூறப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை, இவர்­களை நாடு கடத்­தும் உத்­த­ரவை இல்­லா­மல் செய்து, இலங்­கைக்­குள் நுழை­வ­தற்­கான அனு­ம­தி­யைப் பெற்­றுக் கொடுக்க பல்­வேறு முயற்­சி­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்­றும் கொழும்பு ஆங்­கில ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சுரேஸ்­நாத் இரத்­தி­ன­பா­லன், நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்­தின் உறுப்­பி­னர் என்­றும், முன்­னைய அர­சால் கறுப்­புப்­பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்ட புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளில் ஒரு­வர் என்­றும் கூறப்­ப­டு­கி­றது. (ற–5)

You might also like