வெடி கொளுத்திய சிறுவன் காயம்

தைப்பொங்கலை வரவேற்கும் நோக்கில் வெடி கொளுத்திய சிறுவன் காயமடைந்துள்ளார்.

மன்னார், ஆத்திமோட்டைப் பகுதியில் வெடி கொளுத்தி தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்த சிறுவனின் கையில் வெடி வெடித்ததில் கைவிரலில் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த சிறுவன் சிகிசசைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பண்டிகைகாலங்களில் சிறுவர்கள் குறித்து பெற்றோர்கள் கவனமாகவும் அவதானமாகவும் இருக்க வேண்டுமென பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like