தித்திக்கட்டும்  பொங்கலுடன் சேர்ந்து  தமிழர் தம் வாழ்வும்

தைத் திரு­நாள், தமி­ழர்­க­ளின் பெரு­நாள் இன்று. நன்றி மறவா மாந்­த­ரின் மாண் பு­மிகு நாள். உழ­வர் திரு­நாள் என்று சொல்­லப்­பட்­டா­லும் சூரி­யன் இன்றி இந்­தப் பூவு­ல­கும் உயிர்­க­ளும் இல்லை. சூரிய வெப்­பம் இன்­றேல் பூமி வெறும் குளிர் உருண்டை மட்­டுமே. வான்­வெ­ளி­யில் சுற்­றிச் சுழ­லும் கழி­வைப் போன்­றது.

எனவே சூரி­யனே மனித வாழ்­வின் அடி­நா­தம்; அச்­சா­ரம். அந்த உண்­மை­யைப் புரிந்­து­கொண்­ட­தால்­தான் தமி­ழர்­கள் தைப் பொங்­க­லைச் சூரி­யப் பெரு­வி­ழா­வாக்­கி­னார்­கள். இன்­றும் அதுவே தொடர்­கின்­றது.

சூரி­யனே உல­கத்­தின் அடிப்­படை இயக்க ஆற்­ற­லாக இருக்­கி­றான். ஒரு பிண்­டம் (உடம்பு) இயங்க வேண்­டு­மா­னால் வெப்ப ஆற்­றல் தேவை. ஓர் அண்­டம் (உல­கம்) இயங்க வேண்­டு­மா­னா­லும் சூரி­ய­னின் ஆற்­றல் தேவை. சூரி­யன் இன்றி இவ்­வு­ல­கில் ஓர் அணு­வும் அசை­யாது. என­வே­தான் நமது பண்­பாட்­டில் சூரிய வழி­பாட்­டுக்கு மிக உன்­ன­த­மான இடத்தை வைத்­தி­ருக்­கி­றோம்.

அதற்­கும் மேலே, நம்­பிக்­கை­தான் வாழ்க்கை. அது அற்­றுப்­போ­கும்­போது வாழ்­வில் பிடிப்­புத் தளர்ந்­து­போ­கும். 365 நாள்­க­ளுக்கு ஒரு தடவை மீண்­டும் மீண்­டும் நம்­பிக்­கை­யோடு வாழ்க்­கையை முன்­ன­கர்த்­தும் உத்­தி­யை­யும் இந்­தத் தைத் திரு­நாள் கொண்­டுள்­ளது. ‘‘தை பிறந்­தால் வழி பிறக்­கும்’’ என்­பது அந்த நம்­பிக்கை.

நன்றி அறி­வித்­தல், நம்­பிக்­கையை விதைத்­தல், பூமி இயக்க உண்­மை­யைப் புரிந்­து­கொள்­ளல், தமி­ழர் தம் பண்­பாட்­டுச் செழு­மை­யைப் பறை­சாற்­றல் என்று தைத் திரு­நாள் பன்­மு­கங்­க­ளைக் கொண்­டது. அது தமி­ழர்­க­ளின் தேசிய விழா­வாக, தமி­ழர்­க­ளின் அர­சு­க­ளால் சிலா­கித்­துக் கொண்­டா­டப்­ப­ட­வேண்­டி­யது.

அத்­த­கைய நிலை ஒன்று விரை­வில் வரட்­டும் என்­றும் அதைச் செய்­யக்­கூ­டிய வீரி­யம்­மிக்க தலை­வர் ஒரு­வர் கிடைத்­தி­டு­வார் என்­றும் இந்­தத் தைத் திரு­நா­ளில் நம்­பிக்­கை­கொள்­வோம்.

பொங்­கல் கொண்­டாட்­டம் என்­பது 4 நாள்­க­ளைக் கொண்­டி­ருந்­தது. போகி, பொங்­கல், மாட்­டுப் பொங்­கல், காணும் பொங்­கல் என அது நிறைந்­தி­ருந்­தது. பொங்­க­லன்று வரக் கூடிய சூரிய பூசை­யை­யும், அதன் மங்­க­லங்­க­ளை­யும் வர­வேற்­கும் முக­மாக போகி (அதா­வது பழை­யன கழி­தல்) மார்­கழி மாதக் கடைசி நாளன்று கொண்­டா­டப்­ப­டு­கி­றது.அதன் பின்­னர் மூன்று நாள்­க­ளுக்­கும் தொடர்ச்­சி­யான கொண்­டாட்­டங்­கள் இருக்­கும். அத்­த­கை­ய­தொரு பெருங்­கொண்­டாட்ட தமி­ழர் திரு­நா­ளாக, தனிப் பெரும் நாளாக தைத் திரு­நாள் மலர்­வ­தற்­கான காலம் கனி­ய­வேண்­டும். அதை ஆத­ரிக்­கும் தமி­ழர் ஆட்­சி­க­ளும் மல­ர­வேண்­டும்.

தமிழ் மக்­கள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக ஓர் அர­சி­யல் தீர்வு கிடைக்­க­வேண்­டும். படை­யி­ன­ரின் ஆக்­கி­ர­மிப்­பில் இருக்­கும் எஞ்­சிய காணி­க­ளும் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டும். வீதி­க­ளில் கிடந்து போரா­டும் மக்­கள் தமது வீடு­க­ளுக்­குத் திரும்பி நிம்­ம­திப் பெரு­மூச்­சு­வி­ட­வேண்­டும், காணா­மற்­போ­ன­வர்­க­ளின் கதி அறி­யப்­ப­ட­வேண்­டும். அத்­தோடு அவர்­க­ளின் உற­வு­க­ளுக்கு உத­வி­க­ளும் இழப்­பீ­டு­க­ளும் கிடைத்­தி­ட­ வேண்­டும். போர்க்­குற்ற விசா­ரணை சுயா­தீ­ன­மாக, நீதி­யாக நடந்­தி­ட­வேண்­டும்.

பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் சிறை­க­ளில் வாடும் அர­சி­யல் கைதி­கள் விடு­விக்­கப்­ப­ட­ வேண்­டும். பாழாய்ப்­போன அந்­தச் சட்­டமே இல்­லா­மல் செய்­யப்­ப­ட­வேண்­டும். வடக்கு வாழ் மக்­க­ளுக்கு பொரு­ளா­தார மேம்­பாடு கிட்­ட­வேண்­டும்.
இப்­படி எல்­லா­மும் நடந்­திட பிறந்­தி­டும் தைத் திங்­கள் தந்து மகிழ்­வை­யும் மங்­க­லத்­தை­யும் பொழிந்­தி­டும் என்­கிற நம்­பிக்­கை­யு­டன் ஒவ்­வொ­ரு­வர் வீட்­டி­லும் தித்­திப்­பான பொங்­க­லைப் பொங்­கிப் படைத்து மகிழ்ந்­தி­டு­வோம்.

You might also like