ஜெய­ல­லி­தா­வின் சாவு தொடர்­பில் இரண்டு பெட்­டி­க­ளில் ஆவ­ணங்­கள்!!

தமி­ழக முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் சாவு தொடர்­பில் விசா­ரணை நடத்­தும் ஆணை­யத்­தில் இரண்டு பெட்­டி­க­ளில் ஆவ­ணங்­களை தாக்­கல் செய்­துள்­ளது அப்­பல்லோ நிர்­வா­கம்.

ஜெய­ல­லி­தா­வின் சாவு தொடர்­பாக எழுந்­துள்ள பல்­வேறு சந்­தே­கங்­க­ளைப் போக்கி உண்மை நிலையை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக, ஓய்­வு­பெற்ற நீதி­பதி ஆறு­மு­க­சாமி தலை­மை­யில் விசா­ர­ணைக் குழு அமைக்­கப்­பட்டு விசா­ரணை நடை­பெற்று வரு­கி­றது.

ஜெய­ல­லி­தா­வின் சாவு தொடர்­பில் தொடர்­பு­டைய அனை­வ­ரி­ட­மும் விசா­ர­ணை­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. இந்த நிலை­யில் ஜெய­ல­லி­தா­வுக்கு அளிக்­கப்­பட்ட மருத்­துவ சிகிச்சை தொடர்­பான ஆவ­ணங்­களை விசா­ரணை ஆணை­யத்­தில் தாக்­கல் செய்ய வேண்டும் என அவர் சிகிச்சை பெற்ற சென்னை அப்­பல்லோ மருத்­து­வ­மனை நிர்­வா­கத்­துக்கு நீதி­பதி ஆறு­மு­க­சாமி உத்­த­ர­விட்­டி­ருந்­தார்.

ஆனால், அப்­பல்லோ மருத்­து­வ­மனை இதனை சமர்ப்­பிக்­கா­மல் காலம் தாழ்த்தி வந்­தது. இதை­ய­டுத்து, ஆவ­ணங்­களை ஜன­வரி 12ஆம் திக­திக்­குள் சமர்ப்­பிக்க வேண்­டும் என விசா­ரணை ஆணை­யம் கெடு விதித்­தது. இதை­ய­டுத்தே சுமார் 2 பெட்­டி­க­ளில் அப்­பல்லோ மருத்­து­வ­மனை ஆவ­ணங்­களை கடந்த வெள்ளிக் கிழமை வழங்கப்பட்டன.

You might also like