நத்தை வேகத்தில் நகரும் நல்லாட்சி அரசின் நிர்வாகம்

இரு­பெ­ரும் தேசி­யக்­கட்­சி­கள் கூட்­டுச் சேர்ந்து நடத்தி வரு­கின்ற நல்­லாட்சி அர­சில், தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­ கா­ணும்­நோக்­கத்­தின் அடிப்­ப­டை­யில் அர­சின் பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஒத்­து­ழைப்பு வழங்கி வரு­கின்றது. ஆயி­னும் இந்த அர­சின் நட­வ­டிக்­கை­க­ளில் தற்­போது தமிழ் மக்­கள் ஏமாற்­ற­ம­டைந்து வரு­கின்­ற­னர்.


கடந்த அரச தலை­வ­ரைத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்­கான தேர்­த­லின்­போது மகிந்­த­வைத் தோற் க­டிக்­க­வேண்­டும் என்ற ஒரே குறிக்­கோ­ளு­டன் தமிழ் மக்­கள், எதி­ரணி பொது வேட்­பா­ளர் மைத்­தி­ரி­பா­ல­வுக்கு அமோக ஆத­ர­வை­ய­ளித்து அர­ச­த­லை­வ­ராக வெற்­றி­பெற வைத்­த­னர். மகிந்த ஆட்­சி­யில் தமிழ்­மக்­கள் தொடர்ந்து பல­த­ரப்­பட்ட துன்ப துய­ரங்­களை அனு­ ப­வித்­த­தைக் கருத்­தில் எடுத்தே தமிழ் மக்­கள் மகிந்­தவை தேர்­த­லின்­போது தூக்­கி­யெ­றிந்­த­னர்.
புதிய அரச தலை­வ­ராக மைத்­தி­ரி­பால பத­வி­யேற்று இரண் டாண்­டுகளுக்கு மேலா­கி­யுள்ள நிலை­யில் தமிழ் மக்­கள் அவர்­மீது வைத்த நம்­பிக்கை நலி­வ­டைந்து வரு­கின்­றது. ஆனால் மைத்­தி­ரி­பா­லவோ வடக்கு மாகாண மக்­கள் என்மீது வைத்த நம்­பிக்­கையை நிச்­ச­ய­ மாக நான் காப்­பாற்­று­வேன்; வடக்­கு ­மக்­க­ளின் உத­வியை மறக்­க­மாட்­டேன் எனப் பல தட­வை­கள் கூறி­யி­ருந் தார்.

காற்­றில் கலந்து
காணா­மல்
போய்­விட்ட அர­சின் வாக்­கு­று­தி­கள்
மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் தலை­ல­மை­யி­லான நல்­லாட்­சி­யில் தமிழ் மக்­க­ளால் அற­வ­ழிப் போராட்­டங்­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. பிரச்­சி­னைக்­கான தீர்­வு­ கி­டைக்­காத வரை­யில் தமது போராட்­டத்­தைத் தாம் கைவி­டப்­போ­வ­தில்லை என போராட்­டத்­தில் ஈடு­ப­டு­வோர் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

போர் முடி­வ­டைந்து எதிர்வரும் மேமா­தம்் எட்டு ஆண்­டு­கள் நிறை­வ­டை­ய­வுள்­ளன. நிலவிடுவிப்பு மற்றும் காணா­மற்­போ­னோர்­க­ளைக் கண்­டு­பி­டித்­துத் தரு­மா­றான போராட் டம் என்­பவை தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­யும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் சேர்ந்து இந்­தப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு முடி­வைக் காண­வேண்­டும். இது தொடர்­பாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நல்­லாட்சி அர­சுக்­குக்­க­டும் அழுத்­தங்­க­ளைக் கொடுத்து வரு­கின்­றது.படைத்­த­ரப்­பி­னர் போர் முடிந்­த­பின் னர் தமிழ் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்­கர் காணி­களை கைய­கப்­ப­டுத்தி வைத்­துக்­கொண்டு அவற்றை உரி­மை­யா­ளர்­க­ளி­டம் கைய­ளிக்க மறுத்து வரு­கின்­ற­னர். உயர் பாது­காப்பு வல­யப் பகு­தி­கள் உட்­பட இரா­ணு­வத்­தி­ன­ரி­ட­முள்ள நான்­கா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட ஏக்­கர் காணி­க­ளில் ஓர் அங்­கு­லத்­தைத்தானும் எக்­கா­ர­ணம் கொண்­டும் கைய­ளிக்க மாட்­டோம் என யாழ்ப்­பாணப் படை­க­ளின் கட்­ட­ளைத் தள­ப­தி­யாயிருந்த மேஜர் ஜென­ரல் மகேஸ் சே­ன­நா­யக்கா ஓர் சந்­தர்ப்­பத்­தில் தெரி­வித்­தி­ருந்­தார்.

அதே வேளை வலி.வடக்கில் இரா­ணு­வம் கைய­கப்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கும் 4000 ஏக்­கர் காணி­க­ளில் ஆயி­ரம் ஏக்­கர் காணி­களை தாங்கள் நிரந்­த­ர­மாக வைத்திருக்க வேண்­டு­மென்­ப­தில் இரா­ணு­வத்­தி­னர் உறு­ தி­யாக இருக்­கின்­ற­னர் என யாழ்.மாவட்ட அரச அதி­ப­ரி­னா­லும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

தவற விடாதீர்கள்:  குறிக்கோளில் முற்றுமுழுதாக தோல்வி கண்டுவரும் கூட்டு அரசு

தமிழ்­மக்­கள் தமது சொந்­த­ நி­லங்­களை படை­யி­ன­ரி­டம் இழந்­து­விட்ட நிலை­யில், அவற்றை மீட்­டெ­டுப்­ப­ தற்­காக முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளில் போராடி வந்்­த­னர். ஆனால் படை­யி­னரோ தமிழ் மக்­க­ளின் நிலங்­களை மக்­க­ளி­டம் திருப்­பிக் கைய­ளிக்க மறுக்­கின்­ற­னர்.
எங்­கள் நிலமே எமக்கு வேண்­டும்; அது­வரை தள­ராது போரா­டு­வோம்; நட்ட ஈடும் வேண்­டாம்; மாற்­றுக்­கா­ணி­யும் வேண்­டாம்; எங்­கள் சொந்த இடங்­களே எங்­க­ளுக்கு வேண்­டும். அண்­மை­யில் யாழ்ப் பா­ ணத்­துக்கு வந்­தி­ருந்த முன்­னாள் அரச தலை­வ­ரும், தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்­கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான பணி­ய­கத்­தின் தலை­வி­யு­மான சந்­தி­ரிகா பண்­டார நாயக்­கா­வி­டம் வலி­வ­டக்கு வீமன்­கா­மம் மக்­கள் மேற்­கண்டவாறு உருக்­க­மா­ன­தொரு வேண்­டு­கோள் விடுத்­தி­ருந்­த­ னர்.

வலி­கா­மம் வடக்கு உயர் பாது­காப்பு வல­யம் நிறு­வப்­பட்­ட­தால் இடம்­பெ­யர்ந்த மக்­கள் தங்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­க­ளையே திருப்­பித் தரு­மாறு கேட்­கின்­ற­னர். அவர்­க­ளது எதிர்­பார்ப்பை நாங்­கள் நிச்­ச­ய­மாக நிறை­வேற்­று­வோம். அனை­வ­ரது காணி­க­ளும் யூன் மாதத்­துக்கு முன்­னர் மீள ஒப்­ப­டைக்­கப்­ப­டும் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால தெரி­வித்­தி­ருந்­தமை இங்கு சுட்­டிக்­காட்­டப்­பட வேண்­டிய ஒன்­றா­கும்.

முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளில் உள்ள மக்­க­ளும் படை­யி­ன­ரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தமது சொந்த நிலங்­களை மீட்­ப­தற்­காக போராட்­டங்­களைத் தொடர்ச்­சி­யாக பெப்­ர­வரி, மார்ச் மாதங்­க­ளில் இடை­வி­டாது நடத்­தி­ய­போது, மக்­கள் போராட்­ட­மாக அது பரி­ண­மித்­தி­ருந்­தது. முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் உள்ள பிலக்­கு­டியி­ ருப்பு மக்­க­ளும், கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உள்ள பர­விப்­பஞ்­சான் பகுதி மக்­க­ளும் தொடர்ச்­சி­யாக நடத்­திய போராட்­டங்­க­ளுக்கு ஈடு­கொ­டுக்க முடி­யாத படை­ யி­னர் வேறு வழி­யின்றி தம்­மால் அப­க­ரிக்­கப்­பட்ட தமிழ்­மக்­க­ளின் நிலங்­களை விட்டு வெளி­யே­றி­னர்.

மக்­க­ளது காணி­கள்
விடு­விப்­புக் குறித்த
படைத்­த­ரப்­பின் விடாப்­பி­டித்தனம்
மக்­க­ளின் நில­மீட்­புப் போராட்­டம் இன்­று­வ­ரை­யில் நீண்டு செல்­கின்­றது. ஏறக்­கு­றைய மூன்று தசாப்­த­கால அக­தி­வாழ்க்­கைக்கு என்றுதான் முடிவு வரு­மென சிறு­வர் தொடக்­கம் வயோ­தி­பர்­கள் வரை ஏக்­கத்தோடு பெரு­மூச்­சு­விட்­டுக் கொண்­டி­ருக்­கின்ற நிலையில், வடக்கு மக்­க­ளில் ஒரு சாரார் கடந்த வரு­டம் ஓகஸ்ட் மா­தத்­தில் இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்ட உலக வங்­கி­யின் தெற்­கா­சிய பிராந்­தி­யத்­துக் கான பதில் பொறுப்­ப­தி­காரி அன்ற்­மாரி டில்­க­னி­டம் மரு­த­னார்­ம­டத்­தில் உள்ள அக­தி­மு­கா­மில் வைத்து தங்­க­ளது அவல நிலை­யைத் தெரி­வித்­தி­ருந்­த­னர்.
இதேவேளை யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இரு­பது ஆயி­ரம் ஏக்­கர் காணி­கள் தமது படைத்­த­ரப்­பி­ன­ரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு ள்ளதா­க­வும் அவற்­றில் ஆயி­ரம் ஏக்­கர் விடு­விக்­கப்­பட்­டுள்­ள ­தா­க­வும், இதில் மேலும் நான்­கா­யி­ரம் ஏக்­கர் காணி­கள் விடு­விக்­கப்­ப­டு­மென வும் யாழ்ப்­பாண மாவட்ட பாது­காப்பு படைத்­த­வை­மை­ய­கத்­தின் கட்­ட­ளைத்­த­ள­ப­தி­யாக இருந்­த­வ­ரான மேஜர் ஜென­ரல் மகேஸ் சேன நாயக்கா கடந்த மாதம் தெரி­வித்­தி­ருந்­தார். உயர் பாது­காப்பு வல­யத்­துக்­குள் உள்ள தமிழ் மக்­க­ளுக்கு சொந்­த­மான காணி­க­ளில் குறிப்­பிட்ட அளவு நிலங்­கள் பாது­காப்­புத் தரப்­புக்­க­ளுக்­காக சுவீ­க­ரிக்­கப்­ப­ டும்.

தவற விடாதீர்கள்:  தமி­ழர்­கள் சிந்­திக்க வேண்­டிய தரு­ண­மிது

அதற்கு நஷ்ட ஈடு வழங்­கப்­ப­டும் என்ற யாழ்.பாது­காப்­புப் படை­க­ளின் கட்­டளை தள­ப­தி­யின் பணிப்­புக்கு அமை­வாக யாழ் மாவட்ட அரச அதி­பர் காணி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு கடி­தம் எழு­தி­யி­ருந்­த­தா­க­வும் முத­ல­மைச்­சர் க.வி. விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தி­ருந்­தார்.
சென்ற வரு­டம் செப்­ரெம்­பர் மாதத்­தில் இடம்­பெற்ற வடக்கு மாகாண சபை­யின் 60ஆவது அமர்­வின்­போது காணி­க­ளைத் தரு­வோம் தர­மாட்­டோம் எனக் கூறு­வ­தற்கு இவர்க ளுக்கு அதி­கா­ரம் கொடுத்­த­வர்கள் யார்? இந்த நாட்­டில் நடப்­பது நல்­லாட்­சியா? இரா­ணுவ ஆட்­சியா? என்ற கேள்­வி­யை­யும் உறுப்­பி­னர்­கள் எழுப்­பி­யி­ருந்­த­னர்.

கிளி­நொச்சி இர­ணை­தீ­வில் நீண்­ட­கா­ல­மாக வாழ்ந்து வந்த மக்­கள் தம்மை மீண்­டும் அங்கு குடி­யேற்­றக் கோரி கடந்த மாதம் பூந­கரி பிர­தேச செய­ல­கம் முன்­பாக போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­த­னர்.

மீள்­கு­டி­யேற்­ற­வேண்­டும் என்ற பேர­வாக்­கொண்டு இருக்­கின்ற இரணை தீவு மக்­கள் தாங்­கள் எப்­போது தமது சொந்த இடத்துக்குச் செல்­வோம் என்ற கேள்­விக்­கு­றி­யோடு இருக்­கின்­ற­னர்.

இர­ணை­தீவு மக்­கள் காலம் கால­மா­கத் தாம் வாழ்ந்த பூர்­வீக நிலங்­க­ளில் இருந்து இடம்­பெ­யர்ந்து தமது வீடு­கள், வழி­பாட்­டி­டங்­கள், மக்­க­ளது பிர­தான தொழில்­கள், வளங்­கள் யாவற்­றை­யு­மி­ழந்து மன்­னார் வீதி முழங்­கா­வில் பகு­திக்­கண்­மை­யி­லுள்ள ஒதுக்­குப்­பு­ற­மான ஒரு­ப­குதி நிலத்­தில் நீண்ட கால­மாக அவல வாழ்வு வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

இர­ணை­தீவு மக்­க­ளின் பிர­தான தொழில் கடற்­றொ­ழிலே. நல்­லாட்சி அரசு இர­ணைதீவைத் தம்­மி­டம் கைய­ளிக்க விரைந்­து­ ந­ட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென அந்தப் பகுதி மக்கள் எதிர்­பார்த்­துக் கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

முடிவே இல்­லாது
தொட­ரும் பிலக்­கு­டி­யி­ருப்பு
நில மீட்­புப் போராட்­டம்

முல்­லைத்­தீவு கேப்­பாப்பிலவு குடி­யி­ருப்­பில் இரா­ணு­வம் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள தமது சொந்த நிலங்­களை விடு­விக்க அந்­தப்­ப­குதி மக்­கள் நடத்திவரும் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் அதி­கா­ரத் தரப்­பு­க­ளால் கண்­டு­கொள்­ளப்­ப­ட­வே­யில்லை. கேப்­பாப்­பிலவு இரா­ணுவ முகாம்­முன்­பாக சாலையை மறித்து நில­மீட்­புப் போராட்­டத்தை அவர்கள் தொடர்ந்து நடத்தி வரு­கின்­றனர்.

மார்ச் மாதம் முத­லாம் திகதி பிலக்­கு­டி­யி­ருப்பு மக்­க­ளின் போராட்­டம் நிறை­வுக்கு வந்­த­தை­ய­டுத்து கோப்­பா­பு­லவு மக்­கள் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­த­னர். அத்­து­டன் இரா­ணு­வத்­தி­னர் அச்­சு­றுத்­தல் நட­வ­டிக்­கை­யி­லீ­டு­பட்­டும் வரு­கின்­ற­னர்

ஏமாற்றி வௌியேற்­றப்­பட்ட
முள்­ளிக்­குள மக்­கள்
இன்­ன­மும் நடு­வீ­தி­யில்
மன்­னார் மாவட்­டத்­தி­லுள்ள முள்­ளிக்­கு­ளம் கிராம மக்­க­ளும் தங்­க­ளது சொந்த நிலத்தை மீட்­ப­தற்கு கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திக­தி­யிலி­ருந்து போராட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ள­னர். 08.09.2007 அன்று இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ரின் உத்­த­ர­வுக்­க­மைய மீண்­டும் மூன்று நாள்­க­ளில் கிரா­மத்­துக்­குத் திரும்­ப­லாம் என்று நம்­பிக்­கை­யூட்டி அந்­தக் கிராம மக்­கள் அனை­வ­ரும் வெளி­யேற்­றப்­பட்­ட­னர். ஆனால் பத்து ஆண்­டு­க­ளா­கி­யும் அந்­தக் கிரா­மத்து மக்­கள் தமது சொந்த இடத்­துக்­குச் செல்­வ­தற்கு அனு­ம­திக்க இரா­ணுவத் தரப்பு மறுத்து வரு­கின்­றது.

படை­யி­ன­ரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட நிலங்­க­ளி­லி­ருந்து படை­யி­னர் வெளி­யே­றும் வரை தமிழ்­மக்­கள் மேலும் மேலும் கிளர்ந்­தெ­ழுந்து இரவு பக­லாக போரா­டவே செய்­வர். காணி­களைப் படை­ யி­ன­ரி­ட­மி­ருந்து நல்­லாட்சி அரசு தமிழ் மக்­க­ளுக்கு மீட்­டெ­டுத்­துக் கொடுக்க வேண்­டுமே தவிர போரா­டு­ப­வர்­களை மோதி மிதிக்­கக் கூடாது.

இந்­தக் கிரா­மத்தை எடுத்து வட­மேற்கு மாகா­ணங்­க­ளுக்­கான கடற்­படை கட்­ட­ளைத் தலை­மை­ய­கம் அமைக்­கப்­பட்டு கடற்­ப­டை­யி­னர் அதனை நிரந்­த­ர­ மாக்­கிக் கொண்­டுள்­ள­னர். இந்­தக் கிராம மக்­கள் கடந்த பத்­தாண்­டு­க­ளாக தமது சொந்­தக்­கி­ரா­மத்­தில் சென்று குடி­ய­ம­ரத் தம்மை அனு­ம­திக்­கக் கோரி பல்­வேறு ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­த­னர். மறிச்­சுக்­கட்டி, மலன்­காடு, சேர்ந்த முள்­ளிக்­கு­ளம் மக்­க­ளின் அடிப்­ப­டைத் தொழில்­கள் விவ­சா­யம், மீன்­பிடி என்­ப­ன­வா­கும். இவற்றை இழந்த நிலை­யில் பல தடை­க­ளுக்கு மத்­தி­யில் தங்­க­ளது வாழ்­வா­தா­ரத்­துக்­காக அவர்கள் கஷ்­டப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

தவற விடாதீர்கள்:  குறிக்கோளில் முற்றுமுழுதாக தோல்வி கண்டுவரும் கூட்டு அரசு

வடக்­குக் கிழக்­கில் தமிழ் மக்­க­ளின் காணி­க­ளைப் படை­யி­னர் ஆக்­கி­ர­மித் துத் தொடர்ந்­தும் தம் வசம் வைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர் அவர்­க­ளது காணி­களை அவர்­க­ளி­டம் மீள வழங்­கு­வ­தற்கு மைத்­தி­ரி­யின் நல்­லாட்சி அரசு எதற்­கா­கத்் தயங்க வேண்­டும் என்ற கேள்வி நியா­ய­ மா­ன­தா­கும்.
தென்­ப­கு­தி­யி­லி­ருந்து பல அமைச்­சர்­கள், சிங்­கள அமைப்­புக்­க­ளின் பிர­தி ­நி­தி­கள், புத்­தி­ஜீ­வி­கள், மதத்­த­லை­வர்­கள் என பலர் அடிக்கடி வடக்­குக் கிழக்­குப் பிர­தே­சங்­க­ளுக்கு வந்து செல்­கின்­ற­னர். தமிழ் மக்­கள் தற்­போது நடத்­து­கின்ற போராட்­டங்­களை நேர­டி­யா­கப் பார்­வை­யி­டும் இவர்­கள், தங்­க­ளது இடங்­க­ளுக்­குச் சென்று தமது மக்க ளுக்கு தமிழ் மக்களது பிரச்சி னைகளை எடுத்­துச் சொல்­வ­தற்கு ஏன் முடி­யாது? வெறு­மனே ஒரு சில சிங்­கள மக்­கள் போராட்­டக்­கா­ரர்­க­ளோடு ஒரு அடை­யா­ளத்­துக்­காக குந்­தி­யி­ருந்­து­ விட்­டுப்­போ­னால் மட்­டும் அது போதுமானதாகுமா?
படை­யி­ன­ரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட நிலங்­க­ளி­லி­ருந்து படை­யி­னர் வெளி­யே­றும் வரை தமிழ்­மக்­கள் மேலும் மேலும் கிளர்ந்­தெ­ழுந்து இரவு பக­லாக போரா­டவே செய்­வர். காணி­களைப் படை­ யி­ன­ரி­ட­மி­ருந்து நல்­லாட்சி அரசு தமிழ் மக்­க­ளுக்கு மீட்­டெ­டுத்­துக் கொடுக்க வேண்­டுமே தவிர போரா­டு­ப­வர்­களை மோதி மிதிக்­கக் கூடாது.

மு.ஈழத்­த­மிழ்­மணி

You might also like