ஒரே இரவில் அமைக்கப்பட்ட புதிய தொடருந்து நிலையம்!!

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள முக்கிய தொடருந்துத் தடத்தில் ஆயிரத்து 500 தொழிலாளர்களை கொண்டு ஒரே இரவில் புதிய தொடருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புஜியான் மாகாணத்தில் உள்ள லோங்யான் நகரில் தான் இந்த தொடருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடத்தில் புதிதாகத் தொடருந்து நிலையம் அமைக்கத் தேவைப்பட்டதால், கடந்த 19- ஆம் இரவு பணிகள் தொடங்கப்பட்டு மறுநாள் காலை முடிக்கப்பட்டுள்ளன. 9 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் பணிகள் முடிக்கப்பட்டன.

ஆயிரத்து 500 தொழிலாளர்கள் 7 குழுக்களாகப் பிரிந்து தங்களுக்கு வழங்கப்பட்ட பணியைச் சிறப்பாக செய்துள்ளனர் என்று சீனா டைஸிஜு கட்டுமான நிறுவனத்தில் துணை மேலாளர் ஷான் தாவ்சாங் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வழித்தடத்தில் தொடருந்துகள் இயக்கப்படும் என்று அந்த நாட்டு தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like