‘சுப்பர் ப்ளூ’ சந்திர கிரகணத்தை- ஜனவரி 31 வானில் காணலாம்!!

150 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அபூர்வ நிகழ்வான ‘சுப்பர் ப்ளூ’ சந்திர கிரகணம்’ எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வானில் தோன்றும்.

ஒரு மாதத்தில் ஒரேயொரு முறை மட்டுமே, பௌர்ணமி நாளில், முழு நிலவைப் பார்க்கலாம். அதுவும் ஒவ்வொரு 29 நாள்களுக்கு ஒரு முறை தான் பௌர்ணமி வருகிறது.

ஆனால், கடந்த ஜனவரி முதலாம் திகதி பௌர்ணமி என்பதால் முழு நிலவு தோன்றியது. அதே ஜனவரியிலேயே 31 ஆம் திகதி இரண்டாவது முறையும் பௌர்ணமி வருகிறது.

இவ்வாறு ஒரே மாதத்தில் தோன்றும் இரண்டாவது முழு நிலவுக்குத்தான் ‘ப்ளூ மூன்’ என்று பெயர். இந்த நிகழ்வின் போது நிலவு 14 வீதம் கூடுதல் பிரகாசமாக இருக்கும்.

அத்துடன் சந்திர கிரகணமும் சேர்ந்து கொள்வதால் வரும் ஜனவரி 31 ஆம் திகதி தோன்றும் சந்திர கிரகணம் ‘சுப்பர் ப்ளூ சந்திர கிரகணம்’ என்று அழைக்கப்படுகிறது.

இது 150 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த அபூர்வமான நிகழ்வு. அதே போன்ற சந்திர கிரகணம் கடந்த முறை 1886 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி நிகழ்ந்தது என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like