கிளிநொச்சி கச்சேரிக்கு முன்பக்கம் பாதீனியம்!!

 

கிளிநொச்சி மாவட்டச் செயலக வளாகத்தை அண்மித்த பகுதிகளில் பாதீனியச் செடிகளின் பரம்பல் காணப்படுகிறது எனப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் பாதீனியத்தின் பரம்பலைக் கட்டுப்படுத்தி அதனை முற்றாக அழிப்பதற்­கு மாகாணசபை பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இவ்வாறான ஒருநிலையில் மாவட்டத்தின் அதியுயர் அதிகாரபீடமாகக் கருதப்படும் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாகவே பாதீனியச் செடிகள் பரவிக் கிடப்பது குறித்து பொதுமக்கள் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.

பாதீ­னி­யம் குறித்து பொது­மக்­கள் விழிப்­பாக இருந்­தா­லும், அரச நிறு­வ­னங்­கள் அசட்­டை­யாக இருக்­கின்­றன என்­ப­தற்­கு மாவட்­டச் செய­லக அதி­கா­ரி­களே உதா­ர­ண­மாக இருக்­கின்­ற­னர் என்­றும் பொது­மக்­கள் விச­னம் தெரி­விக்­கின்­ற­ன­ர்.

கிளி­நொச்சி ரயில் நிலை­யத்துக்­கு முன்­பாக – மாவட்­டச் செய­லக வளா­கத்­துக்­குள்­ளும், அதன் தென்­தி­சையை அண்­டிய பகு­தி­யி­லும் பாதீ­னி­யச் செடி­கள் வளர்ந்து காணப்­ப­டு­கின்­றன. மாவட்­டச் செய­ல­கத்­துக்கு நாளாந்­தம் அமைச்­சர்­க­ளும், நாடா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளும் வந்­து­செயல்ன்­ற­னர். எனி­னும், எவ­ரும் இது­தொ­டர்­பில் அக்­கறை கொள்­வ­தா­கத் தெரி­ய­வில்லை என பொது­மக்­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர்.

இந்த இடத்­தி­லேயே பிர­தேச செய­ல­கம், பொது நூல­கம் மற்­றும் பல முக்­கிய இடங்­க­ளும் காணப்­ப­டு­கின்­றன.
பாதீ­னி­ய­ச் செடி­யா­னது 1987ஆம் ஆண்டு இந்­திய இரா­ணு­வத்­தி­ன­ரின் வரு­கை­யைத் தொடர்ந்து எமது பிர­தே­சங்­க­ளில் பர­வத் தெடங்­கி­யது.

அவர்­க­ளின் உண­வுத் தேவைக்­காக கொண்டு வரப்­பட்ட கால்­ந­டை­க­ளின் எருக்­க­ழி­வு­கள்­மூ­லம் இது பர­வி­ய­தா­கத் தெவிக்­கப்­ப­டு­கின்­றது. சுமார் மூன்­றடி உய­ரத்­துக்கு வள­ரும் இந்­தத் தாவ­ரம் வேக­மாகப் பர­விப் பட­ரக்­கூ­டி­ய­தா­கும்.

இதன்­மூ­லம் மண்­ணின் வளம் உறிஞ்­சப்­ப­டு­கின்­றது. இத­னால் அந்த நிலத்­தில் பயி­ரி­டப்­ப­டும் ஏனைய தாவ­ரங்­க­ளின் வளர்ச்சி பாதிக்­கப்­ப­டு­வ­து­டன் மனித இனத்­துக்­கும் ஊறு­கள் ஏற்­ப­டும் என அறி­வி­றுத்­தப்­பட்­டுள்­ளது. பாதீ­னி­யத்­தின் பூக்­களே விதை­யா­கும். இத­னால் அதன் இனப்­ப­ரம்­பல் விரை­வாக நடை­பெ­று­கின்­றது. காற்று, மழை, வெள்ளத்­தின் மூலம் மிக­வி­ரை­வா­கப் பர­வும்.

வடக்­கு­மா­கா­ணத்­தின் பல இடங்­க­ளி­லும் இத்­தா­வ­ரத்­தின் பரம்­பல் காணப்­ப­டு­கின்­றது. இத­னைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­துக்கு பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இலங்கை அர­சி­யல் சட்­டத்­தில் பாதீ­னி­யம் காணப்­ப­டும் இடத்­தின் சொந்­தக்­கா­ரர் அல்­லது இடத்­தின் பரா­ம­ரிப்­பா­ள­ருக்கு எதி­ராகச் சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­மு­டி­யும் – என்­ப­தும் இங்கு குறிப்­பி­டத் தக்­கது.

 

You might also like