மு.க.ஸ்டாலின் கைது!!

தமி­ழக அரசு முன்­வைத்த, பேருந்து உயர்­வுக் கட்­ட­ணத் திட்­டத்­துக்கு எதி­ராக நேற்றுமுன்தினம் நடத்­தப்­பட்ட போராட்­டத்­தில் பங்­கெ­டுத்த தமி­ழக எதிர்­கட்­சித் தலை­வர் மு.க.ஸ்டாலின் கைது செய்­யப்­பட்­டார்.

தமி­ழக அரசு கடந்த 20ஆம் திகதி பேருந்­துக் கட்­ட­ணத்தை உயர்த்­தி­யது. போக்­கு­வ­ரத்­துக் கழ­கங்­க­ளின் நிர்­வா­கத்தை சீர­மைக்­க­வும், புதிய பஸ்­கள் வாங்­க­வும், கட்­ட­ணத்தை உயர்த்த வேண்­டி­யது அவ­சி­யம் என்று அரசு தெரி­வித்­தது. அர­சின் இந்­தத் திட்­டத்­துக்கு தமி­ழ­கத்­தில் பெரும் எதிப்புக்கள் ஏற்­பட்­டது.

பாட­சாலை மாண­வர்­கள், பொது­மக்­கள் எனப் பல­ரும் தொடர்ந்து ஆர்ப்­பாட்­டங்­களை நடத்தி வந்­த­னர். எதிர்­கட்­சி­க­ளின் சார்­பில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட போராட்­டத்­தில் பங்­கெ­டுத்த ஸ்டா லின் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டார்.

பேருந்­துக் கட்­டண உயர்வு தொடர்­பில் மறு­ப­ரி­சீ­லனை செய்­யப்­ப­டும் என்று தமி­ழக முதல்­வர் எடப்­பாடி பழ­னிச்­சாமி அறி­வித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like