Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

கறி­யின் ருசி அகப்­பைக்­குத் தெரி­யாது!!

இப்­ப­டிச் சொல்­கி­றார் தமிழ் அர­சு­ கட்சியின் செய­லர்

கறி­யின் ருசி அகப்­பைக்­குத் தெரி­யாது. அதே­போ­லத்­தான் எம்மை விட்டு வெளி­யே­றி­வர்­க­ளின் நில­மை­யும். இவ்­வாறு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் செய­லர் கி.துரை­ரா­ஜ­சிங்­கம் தெரி­வித்­தார்.

காரை­தீ­வில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

2015ஆம் ஆண்டு மகிந்­த­வின் அரா­ஜக ஆட்­சியை கத்­தி­யின்றி குரு­தி­யின்றி முடி­வுக்கு கொண்­டு­வந்­தது எமது தலை­வர் சம்­பந்­தன் ஜயா­வின் மதி­நுட்­பம். அதே­போல் 1972ஆம் ஆண்டு மற்­றும் 1978ஆம் ஆண்டு அர­ச­மைப்­புக்­க­ளி­லி­ருந்த ஒற்­றை­யாட்சி என்ற பதத்தை தற்­போ­துள்ள இடைக்­கால அறிக்­கை­யில் ஒரு­மித்­த­நாடு என்று மாற்­றி­ய­தும் அவ­ரது மதி­நுட்­பமே.

தமிழ் மக்­க­ளின் உரி­மை­க­ளைப் பெற­வும் இருக்­கின்ற வளங்­களை தக்­க­வைக்­க­வும் எமது கட்சி போரா­டி­வ­ரு­கி­றது. கிழக்­கில் நாம் 11 ஆச­னங்­க­ளைப் பெற்­றும் முஸ்­லிம் காங்­கி­ரஸ் கட்­சிக்கு முத­ல­மைச்­சர் பத­வி­யைத் தாரை வார்த்­துக் கொடுத்­த­தாக பலர் விமர்­ச­னம் செய்­கி­றார்­கள். நாம் யாருக்­கும் முட்­டுக்­கொ­டுக்­க­வும் இல்லை விட்­டுக் கொடுக்­க­வும் இல்லை.

கிழக்­கில் யாரும் தனித்து ஆட்­சி­ய­மைக்க முடி­யாது என்ற ரக­சி­யத்தை விளங்­கிக் கொள்­ள­வேண்­டும். கிழக்கு மாகா­ண­சபை 37 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்­டது. மூவின மக்­க­ளும் உள்ள கிழக்­கில் அறு­திப்­பெ­ரும்­பான்­மையை யாரும் பெற்­று­வி­ட­மு­டி­யாது. இதனை மக்­கள் புரிந்து கொள்­ள­வேண்­டும் -– என்­றார்.