கரந்தாய் காணி மக்களுடையதே !!

14 நாள்களுக்குள் காணி ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு கட்டளை

தென்னைப் பயிர்ச் செய்கை சபை அடாத்­தாக அப­க­ரித்­தி­ருந்த கரந்­தாய் மக்­க­ளு­டைய காணி­கள் மூன்று வரு­டங்­க­ளின் பின்­னர் மக்­க­ளு­டை­யது என்று தீர்­வா­கி­யுள்­ளது.

மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின்­யாழ்ப்­பா­ணக் காரி­யா­ல­யம் இந்­தத் தீர்ப்பை வழங்­கி­யுள்­ளது. எதிர்­வ­ரும் 14 நாள்­க­ளுக்­குள் அந்­தக் காணி­கள் மக்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­பட வேண்­டும் என்று காணிச்­சீர்­தி­ருத்த ஆணைக்­கு­ழு­வின் தலை­வ­ருக்கு மனித உரிமைகள் ஆணைக்­குழு கடி­தம் அனுப்­பி­யுள்­ளது.

1976ஆம் ஆண்டு காணி சீர்­தி­ருத்த ஆணைக்­கு­ழு­வால் கரந்­தாய் மக்­க­ளுக்கு காணி­கள் வழங்­கப்­பட்­டன. போரால் அவர்­கள் அங்­கி­ருந்து வெளி­யே­றி­னர். மீண்­டும் 2014ஆம் ஆண்டு குடி­ய­ மர்ந்­த­னர். அதன் பின்­ன­ரும் இங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்த மக்­கள் 2015ஆம் ஆண்டு அங்கு வந்து தமது காணி­க­ளில் கொட்­டில்­களை அமைத்­துக் குடி­யி­ருந்­த­னர். அந்­தக் காணி­கள் தெங்கு உற்­பத்தி சபை­யி­ன­ரால் உரி­மை­கோ­ரப்­பட்­டது.

அவர்­கள் தமக்கு சொந்­த­மான காணி எனத் தெரி­வித்து அங்கு மீளக்­கு­டி­ய­மர்ந்த மக்­க­களை பளை பொலி­ஸா­ரின் உத­வி­யு­டன் விரட்­டி ­ய­டித்­த­னர். பலர் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­னர்.

தங்­க­ளு­டைய காணி­க­ளி­லேயே அந்த மக்­கள் அத்­து­மீ­றிக் குடி­ய­மர்ந்­த ­னர் என தெங்­குப் பயிர்ச்­செய்கை சபை­யி­ன­ரால் கிளி­நொச்சி நீதி­வான் மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது. வழக்கு விசா­ர­ணை­க­ளில் மக்­கள் தங்­க­ளு­டை­ய­து­தான் அந்­தக் காணி எனக் கோரும் ஆவ­ணத்­தைச் சமப்­பிக்­கு­மாறு தெரி­வித்து கைது செய்­யப்­பட்ட அனை­வ­ரை­யும் மன்று விடு­வித்­தது. விட­யம் மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழு­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

காணி தொடர்­பில் ஆரா­யப்­பட்­டன. காணி சீர்­தி­ருத்த ஆணை­யா­ளர் அது மக்­க­ளு­டைய காணி­தான் என்­பதை ஆணித்­த­ர­மாக் கூறி­னார். தெங்­குப் பயிர்ச்­செய்கை சபை­யி­ன­ருக்கு அந்­தக் காணி­க­ளில் இருந்து வெளி­யேற மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழு கால அவ­கா­சம் வழங்­கி­யது.

5க்கும் மேற்­பட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டங்­கள் இடம்­பெற்­றுள்­ளன. அத்­தனை கூட்­டங்­க­ ளி­லும் இது தொடர்­பில் கதைக்­கப்­பட்­டன. இருந்­தும் எந்­தத் தீர்­வு­க­ளும் பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை.

தெங்­குப் பயிர்ச் செய்கை சபை­யி­னர் மக்­க­ளு­டைய அந்­தக் காணி­க­ளில் தங்­க­ளு­டைய ஆதிக்­கத்­தைத் தொடர்ந்­தும் செலுத்­தி­னர். காணி­க­ளின் தென்­னைப் பயிர்­களை நட்­ட­னர். மக்­கள் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வின் யாழ்ப்­பா­ணக் காரி­யா­ல­யத்­தில் முறைப்­பா­டு­க­ளைப் பதிவு செய்­த­னர். பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச செய­லா­ளர், தெங்கு உற்­பத்தி சபை அதி­கா­ரி­கள், காணிச்­சீர்­தி­ருத்த ஆணைக்­கு­ழு­வின் அதி­கா­ரி­கள் உள்­ளிட்­டோர் ஆணைக்­கு­ழு­வால் விசா­ர­ணை­க­ளுக்கு அழைக்­கப்­பட்­ட­னர். விசா­ர­ணை­கள் இடம்­பெற்­றன.

விசா­ர­ணை­களை அடுத்து தென்­னைப் பயிர்ச் செய்கை சபை­யி­னர் அப­க­ரித்­துள்ள கரந்­தாய் காணி மக்­க­ளு­டை­யது என்று முடிவு செய்­யப்­பட்­டது. மக்­க­ளுக்கு காணி­களை வழங்­கும் நட­வ­டிக்­கை­களை பிர­தேச செய­ல­கம் முன்­னெ­டுத்­து ள்­ளது என பிர­தேச செய­ல­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. காணி உரி­மை­யா­ளர்­கள் மகிழ்ச்­சி­யில் உள்­ள­னர் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like