Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

இனவாதமும் மதவாதமும் இலங்கை அரசியலில் இரு பெரும் தூண்கள்!!

போர் முடிவடைந்த பின்னரும் இலங்கை அரசியலை யும், தேர்தல்களையும் தீர்மானிக்கும் இருபெரும் சக்திகளாக இனவாதமும் மதவாதமுமே இன்றும் காணப்படுகின்றன.

இதற்கு ஆகச் சிறந்த அண்மைக்கால எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சியின் தேர் தல் அறிக்கை.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளும் தத்தமது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்று வவு னியாவில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதில் வைத்து வெளியிடப்பட்ட அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.

இந்த விகாரைகளுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான மதவாத மற்றும் இன வாதப்பாகுபாடு காட் டப்படாத பட்சத்தில் தேர்தல்களில் வெற்றிபெற முடியாது.

அரசியலில் இருப்பைத் தக்கவைக்க முடியாது என்று பெரும் பான்மை இன அரசியல் தலைவர்களும், கட்சிகளும் கொண் டுள்ள ஆழமான நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்தத் தேர் தல் அறிக்கையைக் கொள்ள முடியும்.

இன நல்லிணக்க நடவடிக்கை என்று குறிப்பிட்டே இந்தத் திட்டத்தை முன்வைத்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி. எனின், அதே இன நல்லிணக்கம் என்ற சித்தாந்தத்தின் அடிப்படை யில் கொழும்பில் ஆயிரம் கோவில்களையும், ஆலயங்களை யும், பள்ளிவாசல்களையும் ஐ.தே.கட்சி அமைத்துத் தர முன் வருமா?

இவ்வாறான வாக்குறுதியை அந்தக் கட்சியால் வழங்க முடியுமா? இந்தக் கேள்விக்கு ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுள்ள பதில் தமி ழர்களுக்கும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களுக்கும் சாதகமாக அமையவில்லையாயின், இந்தத் திட்டத்தை நல்லிணக்கத்தின் அடிப்படையிலான திட்டம் என்று எந்த அடிப்படையில் சொல்லிக்கொள்வது. அவ்வாறு சொல்லிக் கொள்வது இம்மியளவேனும் நியாயமானதா?

கடந்த 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரை ஐ.நா. சபையின் தொடர்பாடல் முகாமை யாளராக வன்னியில் பணியாற்றியவரான பெஞ்சமின் டிக்ஸ் முன் வைத்த கருத்தொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந் தப் பத்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதாவது போர்க் காலத்தில் ‘இலங்கை அரசு மேற்கொண்டது இனச் சுத்தி கரிப்பே’ என்று அழுத்தம் திருத்தமாகக் கருத்து வெளிப்படுத்தி யிருந்த டிக்ஸ், தமிழர்களை வரலாற்றில் இருந்து அகற்றும் நட வடிக்கை, அது தொடர்பான நகர்வுகள், வடக்கில் இனப் பரம் பலை மாற்றியமைக்கும் நகர்வுகள் இன்னமும் தொடர் கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார்.

டிக்ஸ் வெளிப்படுத்திய கருத்து முற்றிலும் சரியானது. உண்மைக்குப் புறம்பானது அல்ல என்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகள் என்ற திட்டம் தக்க சான்றாதார மாக அமைகிறது.

தமிழர் தாயகத்தில் விகாரைகள் அமைக்கும் எண்ணம் ஐக்கிய தேசியக் கட்சியிடம் தொடர்ந்து இருக்குமானால், அது தொடர்பான நகர்வுகளும் திட்டங்களும் முன்னெடுக் கப்படுமானால், அந்தத் திட்டங்கள் செயல்வடிவம் பெறு மானால் அவை டிக்ஸ் குறிப்பிட்டதைப் போன்று ‘இனப் பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கை’ என்ற வகைப் பாட்டுக்குள்ளேயே அடங்கும்.
ஆக, மத வாதத்தையும் இனவாதத்தையும் தூண்டி பெரும் பான்மை இன மக்களை உசுப்பேற்றி வாக்குகளை வேட்டை யாடி வாக்குவங்கிகளைத் தக்கவைக்கும் தந்திரத்தை முதன்மைக் கட்சிகள் கைவிட வேண்டும்.

அதுவே இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற் படுத்தும். அதைவிடுத்து ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள் ளமை போன்ற திட்டங்கள் பெரும்பான்மை இனத்தைத் திருப்திப் படுத்தலாமே தவிர, ஒருபோதும் இனங்களுக்கிடை யேயான நல்லிணக்கத்ைத ஏற்படுத்தமாட்டா.