Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

வேண்­டும் சுதந்­தி­ரம்!!

இன்று தனது 70 ஆவது சுதந்­திர தினத்தைக் கொண்­டா­டு­கி­றது இலங்கை. காலி முகத்­தி­டல் விழாக்­கோ­லம் பூண்ட நிலையில் சுதந்­திர தின விழா கோலா­க­ல­மா­கக் கொண்­டா­டப்­ப­டு­கி­றது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க் கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் உள்­ளிட்ட அர­சி­யல் பிர­தி­நி­தி­கள் பல­ரும் இலங்கை மக்­க­ளுக்கு தத்­த­மது வாழ்த்­துக்­க­ளைத் தெரி­வித்­துள்­ள­னர்.

ஆனால், பெரும்­பான்மை இன மக்­க­ளின் மனநிலையோடுதான் சிறு­பான்­மை­யின மக்­க­ளும் இன்­றைய சுதந்­திர தினத்தை எதிர்­கொள்­கின்­ற­னரா? தத்­த­மது தலை­மை­க­ளி­டம் இருந்து வந்­துள்ள வாழ்த்தை ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய மன­நி­லை­யில்­தான் அவர்கள் உள்­ள­னரா? என்று கேட்­டால்,இல்லை என்று ஒற்­றை­வ­ரி­யில் முடிப்­பதே ஆகச் சிறந்­த­தாக அமை­யும். 1948ஆம் ஆண்டு பிரிட்டன் கால­னித்­து­வத்­தின் கீழிருந்து விடு­பட்­டது இலங்கை.

அதன் பின்­னர் மேலோங்­கிய சிங்­கள, பௌத்த பேரி­ன­வா­தத்­தில் இருந்து விடு­ப­டு­வ­தற்­காக தமி­ழர் தாயக மக்­கள் இன்­று­வரை போரா­டிக் கொண்­டு­தான் உள்­ள­னர். தமிழ் மக்­க­ளின் விருப்பு வெறுப்­புக்­களை தமது கோரிக்­கை­க­ளாக வலி­யு­றுத்தி சுமார் 3 தசாப்­தத்­துக்­கும் மேலாக ஆயு­த­மேந்­திப் போரா­டி­வந்த விடு­த­லைப் புலி­கள் கடந்த 2009ஆம் ஆண்டில் மௌனிக்­கச் செய்­யப்­பட்ட பின்­ன­ரும் ­கூட, சத்­த­மில்­லாத போர் இன்­ற­ள­விலும் தொடர்ந்து அரங்­கே­றிக்கொண்­டு ­தான் உள்­ளது.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்­த வீட்­டுக்கு அனுப்­பப்­பட்டு மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சிப்­பீ­டம் ஏறு­வ­தற்கு சிறு­பான்மை மக்­க­ளின் வாக்­கு­கள் முக்­கிய துருப்­புச் சீட்­டுக்­க­ளாக அமைந்­தன. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன – தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான இந்­தக் கூட்டு ஆட்சி, தன்னை ‘நல்­லாட்சி’ என்று அடை­யா­ளப்படுத்­தி­ய­மைக்கு ஏற்­ப­வும், தமக்கு வாக்­க­ளித்த சிறு­பான்மை மக்­க­ளுக்கு பிரதி உப­கா­ர­மா­க­வும் இது­வரை மிகப்­பெ­ரும் நகர்­வு­கள் எதை­யும் முன்­னெ­டுக்­க­ வில்லை.

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் குறித்த நிலைப்­பாட்டைத் தெளி­வு­ப­டுத்த வேண்­டும், அர­சி­யல் கைதி­களை விடு­விக்க வேண்­டும், வடக்கு – கிழக்­கில் அதி­க­ரித்­துள்ள இரா­ணு­வப் பிர­சன்­னத்­தைக் குறைக்க வேண்­டும், படை­யி­னர் வச­முள்ள காணி­களை விடு­விக்க வேண்­டும், தமி­ழர் தாய­கத்­தில் அள­வுக்கு அதி­க­மாக மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரும் பௌத்த மய­மாக்­கலைக் குறைக்க வேண்­டும் உள்­ளிட்ட பல கோரிக்­கை­களை முன்­வைத்து அல்­லும் பக­லும் வீதி­க­ளி­லும், பொது இடங்­க­ளி­லும் போராடி வரு­கின்­ற­னர் தமிழ் மக்­கள்.

தத்­த­மது கோரிக்­கை­கள் இம்­மி­ய­ள­வே­னும் செவி­சாய்க்­கப்­ப­ட­வில்லை என்ற வெறுப்­பில் அவர்­க­ளின் அன்­றா­ட வாழ்வு கழிந்து ­கொண்­டி­ருக்­கி­றது. இத்­த­கைய பின்­ன­ணி­யி­லேயே இந்­தச் சுதந்­திர தினத்தை வெறும் பேச்­ச­ள­வில் அவர்­கள் எதிர்­கொள்­கின்­ற­னர். ஆக, தமிழ் மக்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் எந்­த­வி­த­மான உள்­ளார்ந்த மாற்­ற­மும், ஆர­வா­ர­மும் இல்­லா­மல் பத்­து­டன் பதி­னொன்­றாக இந்த நாள் கடந்து செல்­கி­றது.

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பி­லும், தமிழ் மக்­க­ளின் எதிர்­பார்ப்பு தற்­போது நிலை­பெற்­றுள்­ளது. வடக்கு – கிழக்கு இணைப்பு, நிதித்­து­றைச் சுதந்­தி­ரம், மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­கள் திரும்­பப் பெறப்­பட முடி­யாத இறுக்­க­மான பொறி­முறை ஆகி­ய­வற்றைத் தனது மூன்று அம்­சக் கோரிக்­கை­க­ளாக முன்­வைத்­துள்ள கூட்­ட­மைப்பு இவற்­றின் மட்­டில் சிறு விட்­டுக்­கொ­டுப்­புக்கும் இடம் இல்லை என்­றும் அழுத்­தம் திருத்­த­மாக அறி­வித்­துள்­ளது.

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பி­லும், மேற்­கு­றிப்­பிட்ட விட­யங்­க­ளி­லும் தமி­ழர் தாயக மக்­க­ளுக்­குச் சாத­க­மாக எதை­யா­வது மைத்­திரி – ரணில் கூட்­டாட்சி அரசு சாதிக்­கும் பட்­சத்­தில் இலங்­கை­யின் 71ஆவது சுதந்­தி­ர­மா­வது அவர்­க­ளுக்கு இனி­தாக அமை­யும். இல்­லை­யேல் எத்­தனை சுதந்­திர தினங்­களை இலங்கை கண்­டா­லும் அவை பெரும்­பான்மை இன மக்­க­ளுக்கு மட்­டு­மா­ன­தாகவே அமை­யும். அதுவே யதார்த்­த­மும்­கூட.