Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

எங்­கள் அழி­வுக்குக் கார­ண­மான தேசிய கட்­சி­க­ளுக்கா வாக்கு ? சித்­தார்த்­தன் எம்.பி.

அழி­வு­க­ளுக்­கெல்­லாம் மூல­கா­ர­ண­மாக இருந்த தேசி­யக் கட்­சி­கள் இரண்­டும், ஏதோ தாங்­கள்­தான் தமி­ழர்­க­ளுக்கு உரி­மை­களை வென்று தரப்­போ­கின்­ற­வர்­கள் போல­வும், தமிழ் பகு­தி­களை அபி­வி­ருத்தி செய்ய தங்­க­ளி­டம் அதி­கா­ரத்தை தாருங்­கள் என­வும் மக்­கள் மத்­தி­யில் இங்கு வந்து கேட்­கி­றார்­கள். இவ்­வாறு புளொட் அமைப்­பின் தலை­வ­ரும், யாழ்ப்­பாண மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தர்­ம­லிங்­கம் சித்­தார்த்­தன் தெரி­வித்­தார்.

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டம் களு­வாஞ்­சி­கு­டி­யில் நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கடந்த கலத்­தில் தமிழ் மக்­க­ளின் துன்­பங்­க­ளுக்­கும், துய­ரங்­க­ளுக்­கும் அழி­வு­க­ளுக்­கும் எந்­தக் கட்­சி­கள் கார­ணமாக இருந்­த­னவோ அந்த இரண்டு கட்­சி­க­ளும், தமி­ழர்­களை மாறி மாறி ஆட்­சிக்கு உட்­ப­டுத்தி இருந்­தன. சுதந்­தி­ரம் பெற்ற நாள் தொடக்­கம் ஒவ்­வொரு விட­ய­மாக தமிழ் மக்­களை இரண்­டாம்­த­ரக் குடி­மக்­க­ளாக அடி­மை­க­ளாக மாற்­று­வ­தற்கு ஒவ்­வொரு சட்­டத்­தை­யும் இயற்­றி­னர்.

இவை மாத்­தி­ர­மின்றி ஒவ்­வொரு வன்­மு­றை­க­ளை­யும், இந்­தக் கட்­சி­கள் தூண்­டி­ விட்டு, தமி­ழர்­களைத் துன்­பு­றுத்­திய காலங்­க­ளிலே, சாத்­வீக ரீதி­யிலே உரி­மை­களை வென்­றெ­டுக்­க­லாம் என்று அந்­தக் காலத்­தில் தந்தை செல்­வ­நா­ய­கம் பல சாத்­வீ­கப் போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­தார்.

அவர் தலை­மை­யில் நடத்­தப்­பட்ட சாத்­வீ­கப் போராட்­டங்­க­ளெல்­லாம் ஆயு­தங்­க­ளால் அடக்­கப்­பட்ட போது, ஆயு­தத்­திற்கு ஆயு­தம் தான் பதி­லாக இருக்­கும் என்று எமது தலை­வர் உமா மகேஸ்­வ­ரன் தொடக்­கம் தலை­வர் பிர­பா­க­ரன் வரைக்­கும், பத்மநாபா போன்­ற­வர்­க­ளும், ஒரு உணர்­வு­டன் ஆயு­தப் போராட்­டத்தை ஆரம்­பித்தனர்.

உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­த­லுக்கு அங்­கி­ருந்து இங்கு வந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்க பரப்­புரை செய்­கின்­றார் என்­றால் இந்த தேர்­த­லுக்கு அவர் கொடுத்­தி­ருக்­கின்ற முக்­கி­யத்­து­ வத்தை மக்­கள் நன்கு அறி­வர்.

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான பிரச்­சினை, காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் பிரச்சினை, அர­சி­யல் கைதி­க­ளின் பிரச்­சினை, காணி­வி­டு­விப்புப் பிரச்­சினை, காணி அப­க­ரிப்­புப் பிரச்­சினை உள்­ளிட்ட பிரச்­சி­னைக­ளுக்கு தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பு, மிகப்­பெ­ரிய அழுத்­தங்­க­ளைத் தேசிய ரீதி­யில் மாத்­தி­ர­மின்றி, பன்­னாட்டு ரீதி­யி­லும் கொடுத்­துள்­ளது.

இத­னால்­தான் ஐக்­கிய நாடு­கள் சபை­யில் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­பட வேண்­டும் என்று தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இலங்கை அர­சின்­மேல் பல அழுத்­தங்­களை பன்னா­டு­கள் கொடுத்­துக் கொண்­டி­ருக்­கின்­றன.அவை தொட­ர­வேண்­டும் என்­றால் மக்­கள் கூட்­ட­மைப்­புக்கு வாக்­க­ளிக்­க­வேண்­டும் -– என்­றார்.