விரைவில் அறிமுகமாகின்றது கூகுள் ஏர்த்தின் புதிய பதிப்பு!

கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் கூகுள் ஏர்த் சேவை பற்றி அறிந்திராதவர்கள் அரிது என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு பயணங்களின் போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக விளங்குகின்றது.

இச் சேவை அறிமுகம் செய்யப்பட்டு ஏறத்தாழ 15 வருடங்கள் ஆகின்றன.

அதாவது 2001ம் ஆண்டு ஜுன் மாதம் 11ம் திகதி இச் சேவை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18ம் திகதி கூகுள் ஏர்த்தின் புதிய பதிப்பு ஒன்றினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் Virtual Reality தொழில்நுட்பம் இணைக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

அறிமுகமாவதற்கு இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களில் புதிய தகவல்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You might also like