காட்­டாட்சி நடத்­தி­ய­வர்­கள் நிதி கிடைத்­தும் அபி­வி­ருத்தி செய்­ய­வில்லை!!

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச ஆட்­சிக் காலத்­தில் அவர்­க­ளின் கூட்­டா­ளி­க­ளா­க­வி­ருந்து அட்­ட­கா­சம் புரிந்து எமது பகு­தி­யில் காட்­டாட்சி நடத்­தி­ய­வர்­க­ளுக்கு அபி­வி­ருத்­திக்­காக பெரு­ம­ள­வான நிதி கிடைத்­தது. எமது பகு­தி­களை அவர்­க­ளால் அபி­வி­ருத்தி செய்­தி­ருக்க முடி­யும்.

ஆனால் அவர்­கள் அப்­போது எது­வும் செய்­ய­வில்லை. இப்­போது வாக்­குக் கோரி உங்­க­ளி­டம் வரு­கின்­றார்­கள். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறித­ரன் தெரி­வித்­தார்.

பொன்­னா­வெளி பிர­தே­சத்­தில் நடை­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தமி­ழர் தாய­கப் பகு­தி­க­ளில் நடை­பெ­று­கின்ற தேர்­தல்­க­ளில் எந்­தக் காலத்­தி­லும் சோரம் போகாத தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக் குத்­தான் ஒவ்­வொரு தமிழ் மக­னும் வாக்­க­ளித்து தமது ஒற்­று­மையை நிலை­நாட்டி வேண­வாக்­களை அடைந்து கொள்ள முயற்­சிப்­பான்.

இந்த நாட்­டிலே நாம் விடு­த­லையை வேண்­டிப் போரா­டு­கின்ற ஒரு இனம். எமக்கு அபி­வி­ருத்­தி­யும் வேண்­டும் எமக்­கான விடு­த­லை­யும் வேண்­டும். நாம் கடந்த முப்­பது ஆண்­டு­க­ளுக்கு மேலாக அகிம்சை வழி­யில் போராடி ஆயு­தம் கொண்டு அடக்கி ஒடுக்­கப்­பட்­ட­தன் விளை­வாக கடந்த 30 ஆண்டு கால­மாக ஆயுத வழி­யில் போராடி கடந்த 2009 ஆம் எமது ஆயுத வழிப் போராட்­ட­மும் முள்­ளி­வாய்க்­கா­லு­டன் மௌனிக்­கப்­பட்­ட­தன் பின்­னர் எமது தேசி­யத் தலை­வ­ரால் தீர்க்­க­த­ரி­சன சிந்­தனை மூலம் உரு­வாக்­கப்­பட்ட தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு என்­கின்ற தமி­ழர்­க­ளின் அர­சி­யல் பலம் மிக்க சக்­தி­யின் மூலம் அர­சி­யல் வழி­யில் போராடி வரு­கின்­றோம்.

தமிழ் மக்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு இடப்­ப­டு­கின்ற வாக்கு, தமிழ் மக்­க­ளின் பலத்தை நிலை நிறுத்­து­வ­து­ டன் எமது விடு­த­லைக்­கான பய­ணத்துக்கும் வலுச் சேர்க்­கும். எதிர்­வ­ரும் பத்­தாம் திகதி தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வீட்­டுச் சின்­னத்துக்கு வாக்­க­ளித்து தமிழ் தேசி­யத்துக்கு பலம் சேர்ப்­பீர்­கள் என்ற நம்­பிக்கை எமக்­குள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வெற்றி தமி­ழ­னின் வெற்றி -– என்­றார்.

You might also like