மகிந்த ராஜ­பக்ச வாங்­கிய இரு தமிழ் பத்­தி­ரி­கைக­ள்

தேர்­தல் கூட்­டத்­தில் சுமந்­தி­ரன் எம்.பி. தக­வல் இரண்டு தமிழ் ஊட­கங்­களை மகிந்த ராஜ­பக்ச வாங்கி விட்­டார். இன்­று­தான் எனக்கு இந்­தத் தக­வல் கிடைத்து. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஊட­கப் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

கர­வெட்­டி­யில் வேட்­பா­ளர் ஒரு­வ­ரின் வீட்­டில் இடம்­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.  அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

முக்­கி­ய­மான இரண்டு தமிழ் ஊட­கங்­களை மகிந்த ராஜ­பக்ச வாங்கி விட்­டா­ராம். இன்று காலை­தான் இந்­தத் தக­வல் எனக்குக் கிடைத்­தது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பா­ணம் வந்தபோது கறுப்­புக் கொடி காட்­டியவர்­கள், கறுப்­புப்பட்டி அணிந்து போராட்­டம் நடத்­தியவர்­கள், முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச யாழ்ப்­பா­ணம் வந்­த­போது எந்த எதிர்ப்­பும் தெரி­விக்­க­வில்லை. மகிந்­த­வுக்கு சிறப்­பான வர­வேற்­பைக் கொடுத்­துள்­ளார்­கள் –- என்­றார்.

You might also like