Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

தொங்குநிலையில் புதிய அரசமைப்பு!!

பன்னாட்­டுச் சமூ­கத்­தி­ன­தும், இலங்­கை­வாழ் மக்­க­ளி­ன­தும் பெரும் எதிர்­பார்ப்­புக்­க­ளுக்கு மத்­தி­யில் உரு­வா­கி­வ­ரும் புதிய அர­ச­மைப்பு மெய்ப்­ப­டுமா என்­ப­தைச் சந்­தே­கக் கண்­கொண்டு பார்க்­க­வேண்­டிய நிலை­யில், அது தொடர்­பான அண்­மைக்­கால வெளிப்­ப­டுத்­தல்­கள் அமைந்­துள்­ளன.

எதிர்­வ­ரும் 10ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கான பரப்­பு­ரை­கள் தற்­போது துரித கதி­யில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. தேர்­தல் பரப்­பு­ரை­க­ளில் எதிர்க்கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் வெளிப்­ப­டுத்­தி­யுள்ள கருத்­துக்­கள், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோர் அண்­மைக்­கா­லத்­தில் வெளிப்­ப­டுத்­திய கருத்­துக்­கள் ஆகி­ய­வற்றை எடுத்­து­நோக்­கி­னால் கூட்­ட­மைப்­பின் கோரிக்­கை­க­ளுக்கு இணக்க அர­ச­மைப்பு வரு­வ­தென்­பது சாத்­தி­ய­மற்­ற­தா­கவே தெரி­கி­றது.

வடக்கு – கிழக்கு இணைப்பு, மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­கள் திரும்­பப் பெறப்­பட முடி­யாத இறுக்­க­மான பொறி­முறை, நிதித்­து­றைச் சுதந்­தி­ரம் ஆகி­ய­வற்றை அர­ச­மைப்­புத் தொடர்­பில் தனது மூன்று அம்­சக் கோரிக்­கை­க­ளாக வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது கூட்­ட­மைப்பு.

இந்த மூன்று விட­யங்­க­ளில் எந்­த­வி­த­மான விட்­டுக்­கொ­டுப்­புக்­கும் இட­மில்லை என்­ப­தை­யும் அது பல தட­வை­கள் வெளிப்­ப­டுத்­தி­விட்­டது.

தனது நிலைப்­பாட்­டில் உடும்­புப் பிடி­யு­டன் உள்­ள­மையை தேர்­தல் பரப்­பு­ரை­க­ளில் அடிக்­கொரு தடவை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வெளிப்­ப­டுத்­து­கி­றது. களு­வாஞ்­சிக்­கு­டி­யில் அண்­மை­யில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான சம்­பந்­தன், ‘ஒற்­றை­யாட்­சியை ஒரு­போ­தும் ஏற்­கப்­போ­வ­தில்லை. தமி­ழீ­ழத்­தை­யும் ஏற்­கப்­போ­வ­தில்லை.

ஒரு­மித்­த­தும், பிரிக்­கப்­பட முடி­யா­த­து­மான நாட்­டுக்­குள் எமது இறை­யாண்­மை­யின் அடிப்­ப­டை­யில் உள்­ளக சுய நிர்­ணய அடிப்­ப­டை­யில் நாங்­கள் இந்த நாட்­டுக்­குள் வாழ் வ­தற்கு எமக்கு உரித்­துண்டு. அது அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்­டும்’ என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

சம்­பந்­தன் தனது கருத்­துக்­களை ‘கூட்­டாட்­சித் தத்­து­வம்’ என்ற சாரப்­ப­டவே வைத் திருந்­தார். சம்பந்­த­னின் கருத்து இவ்­வாறு அமை­கை­யில் ‘கூட்­டாட்­சிக்கு இட­மே­யில்லை’ என்று அழுத்­தம் திருத்­த­மாக தெரி­வித்­துள்­ளார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன.

ஆக, கூட்­ட­மைப்­பின் கோரிக்­கை­க­ளில் ஒன்­றான மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­கள் திரும்­பப் பெறப்­ப­ட­மு­டி­யாத இறுக்­க­மான பொறி­முறை கொண்ட அர­ச­மைப்பு என்­பது இங்கு கேள்­விக்கு உட்­ப­டு­கி­றது. அதி­கா­ரப் பகிர்வு அல்­லது அதி­கா­ரப் பர­வ­லாக்­கம் என்­பது புதிய அர­ச­மைப்­பி­லும் இருக்க வாய்ப்­பில்லை என்றே எண்­ணத்­தோன்­று­கி­றது.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வ­ரும், தலைமை அமைச் சரு­மான ரணில் அண்­மை­யில் வழங்­கிய செவ்­வி­யொன்­றில் ‘வடக்­கில் தமி­ழர்­கள் பெரும்­பான்­மையா?’ என்று கேள்வி எழுப்­பி­யுள்­ளார். கிழக்­கில் தமிழ் மக்­கள் பெரும்­பான்­மை­யாக இல்லை. வடக்­கில் எப்படி­யென்று எனக்­குத் தெரி­ய­வில்லை. கிழக்­கில் தமிழ் மக்­கள் பெரும்­பான்­மை­யாக இருந்­தால் வடக்கு – கிழக்கு இணைப்பை மேற்­கொள்ள முடி­யும். பல­வந்­த­மாக மேற்­கொள்ள முடி­யாது என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார் அவர்.

இந்த நாட்­டின் தலைமை அமைச்­சர் என்ற அடிப்­ப­டை­யில் பார்க்­கை­யில், வடக்­கில் தமிழ் மக்­கள் பெரும்­பான்மை என்று அவர் ஏற்க மறுத்­தி­ருப்­பது அல்­லது அது தொடர்­பான அறி­வில்­லா­மல் இருப்­பது அபத்­தம்.

ரணில் வெளிப்­ப­டுத்­தி­யுள்ள கருத்­துக்­க­ளின் அடிப்­ப­டை­யில் பார்க்­கை­யில், கூட்­ட­மைப்­பின் மற்­றொரு கோரிக்­கை­யான வடக்கு – கிழக்கு இணைப்பு என்­ப­தும் சாத்­தி­ய­மற்­றது என்­பது புலப்­ப­டு­கி­றது.

ஆக, பல­மு­னைப் போராட்­டங்­க­ளில் சிக்­கித்­த­வித்து, புதிய அர­ச­மைப்­புத்­தான் தமக்­கு­ரிய தீர்வு என்று எதிர்­பார்த்­தி­ருக்­கும் தமி­ழர் தாய­கம் இல­வு­காத்த கிளி­யின் நிலைக்கு மற்­று­மொ­ரு­முறை செல்­லப்­போ­கி­றது என்­பது மட்­டும்­தான் அண்­மைக்­கால அர­சி­யல் நகர்­வு­க­ளில் வெளிப்­ப­டும் விட­ய­மாக அமை­கி­றது.