Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

பன்னாட்டுத் தரப்படுத்தலில் முதலிடத்தில் இந்தியா

பன்னாட்­டுக் கிரிக்­கெட் சபை­யின் ஒரு­நாள் ஆட்­டங்­க­ளுக்­கான தரப்­ப­டுத்­த­லில் இந்­திய அணி முத­லி­டம் பிடித்­தது.  இந்­திய அணி தென்­னா­பி­ரிக்­கா­வுக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்டு விளை­யாடி வரு­கி­றது.

இந்த இரண்டு அணி­ க­ளுக்­கும் இடை­யி­லான ஒரு­நாள் தொடர் தற்­போது நடை­பெற்று வரு­கி­றது. முத­லா­வது ஒரு­நாள் ஆட்­டத்­தி­லும், நேற்று நடை­பெற்ற இரண்­டா­வது ஒரு­நாள் ஆட்­டத் தி­லும் இந்­திய அணி வெற்­றி­பெற்­றதை அடுத்து அந்த அணி தரப்­ப­டுத்­த­லில் முத­ லி­டம் பிடித்­தது.

முத­லி­டத்­தில் இருந்த தென்­னா­பி­ரிக்க அணி இரண்­டா­வது இடத்­துக்­குப் பின்­தள்­ளப்­பட்­டது. எனி­னும் இரண்டு அணி­க­ளும் தலா 120 புள்­ளி­க­ளையே பெற்­றுள்­ளன.

116 புள்­ளி­க­ளு­டன் இங்­கி­லாந்து மூன்­றா­வது இடத்­தி­லும், 115 புள்­ளி­க­ளு­டன் நியூ­சி­லாந்து நான்­கா­வது இடத்­தி­லும் 112 புள்­ளி­க­ளு­டன் ஆஸ்­தி­ரே­லிய அணி ஐந்­தா­வது இடத்­தி­லும் உள்­ளன.

ஆறு முதல் பத்து வரை­யி­லான இடங்­க­ளில் முறையே பாகிஸ்­தான், பங்­க­ளா­தேஷ், இலங்கை, மேற்­கிந்­தி­யத் தீவு­கள், சிம்­பாப்வே ஆகிய அணி ­கள் உள்­ளன. இலங்கை அணி 72 புள்­ளி­க­ளைப் பெற்­றுள்­ளது.