Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

திவ்யா உன்னி மறுமணம்!!

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள நடிகை திவ்யா உன்னி மறுமணம் செய்துள்ளார். மும்பையைச் சேர்ந்தஅருண் குமார் மணிகண்டனை, அமெரிக்காவின் ஹுஸ்டனில் திருமணம் செய்து கொண்டார்.

2002 இ-ல் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் சுதிர் சேகரனைத் திருமணம் செய்தார் திவ்யா உன்னி. அவர்களுக்கு அர்ஜூன், மீனாட்சி என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்தநிலையில் 2016 ஆ-ம் ஆண்டு சுதிர் சேகரனை திவ்யா விவாகரத்து செய்தார். அதையடுத்து தற்போது நடனக் கலைஞராக உள்ள திவ்யா உன்னி, மறுமணம் செய்துள்ளார். இந்தத் தகவலை அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 2013 க்குப் பின்னர் திவ்யா உன்னி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.