Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

வடக்கு ஆளுநரின் கருத்துக்கு உறவுகள் கண்டனம்!!

போரின்­போது இடம்­பெற்ற குற்­றங்­களை அனை­வ­ரும் மறந்து விட வேண்­டும் என்று வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே வலி­யு­றுத்­தி­யி­ருக்­கும் நிலை­யில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளின் குழு­மம் கடும் எதிர்ப்­பைத் தெரி­வித்­துள்­ளது. அவர் அவ்­வாறு கூறு­வ­தன் ஊடாக தம்மை மறை­மு­க­மாக அச்­சு­றுத்­துகிறாரா? என்­றும் குழு­மம் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளது.

அநு­ரா­த­பு­ர­தம் சிறைச்­சா­லை­யில் தடுத்­து­ வைக்­கப்­பட்­டுள்ள அர­சி­யல் கைதி­கள் மூவ­ரின் வழக்கு விசா­ர­ணை­கள் அநு­ரா­த­பு­ரம் மேல் நீதி­மன்­றி­லி­ருந்து வவு­னியா மேல் நீதி­மன்­றுக்கு மாற்­றப்­ப­டு­கின்­றது என சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தால் மேன்­மு­றை­யீட்டு நீதி ­மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது.

குறித்த அர­சி­யல் கைதி­கள் மூவ­ர­தும் உற­வி­னர்­கள் வடக்கு மாகாண ஆளு­நர் றெஜி­னோல்ட் குரேயை யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள அவ­ரது இல்­லத்­தில் அண்மை யில் சந்­தித்­தி­ருந்­த­னர். ஆளு­ந­ருக்­கும் அரச தலை­வ­ருக்­கும் அவர்­கள் நன்றி தெரி­வித்­த­னர். அதன்­பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கருத்­து­வெ­ளி­யிட்ட போதே வடக்கு மாகாண ஆளு­நர், ‘தற்­போது போராட்­டங்­கள், போர் என்­பன முடிந்­து­விட்­டன.

அந்­தக் காலத்­தில் நடை­பெற்­ற­வை­களை எல்­லாம் நாம் மறக்­க­வேண்­டும். அவற்றை நெஞ்­சில் வைத்­துக்­கொண்டு கோபத்­தில் செய்­ப­வை­க­ளால் எந்­தப் பய­னு­மில்லை’ என்­பன உட்­ப­டப் பல கருத்­துக்­க­ளைக் கூறி­யி­ருந்­தார்.

வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­கள் வவு­னி­யா­வில் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். ஆளு­ந­ரின் கருத்­துத் தொடர்­பில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளின் குழு­மம் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஆளு­நர் தனது கருத்­தின் மூலம் போர் சார்­பான விட­யங்­களை கைவி­டு­மா­றும், இது தொடர்­பில் போரா­டு­வது பய­னில்லை என்ற அர்த்­தத்­தில் மென்­மை­யான விதத்­தில் ஒரு அச்­சு­றுத்­தல் விட்­டி­ருந்­தார். அவ­ருக்கு நாமும் ஒன்­றைச் சொல்­லிக் கொள்ள வேண்­டும். 20 ஆயி­ரம் தமிழ் உற­வு­கள் காணா­மல் ஆக்­கப்­பட்­டுள்­ளார்­கள். அவர்­க­ளுக்­காக 347 நாள்­க­ளா­கத் தெரு­வில் நாம் போராடி வரு­கின்­றோம்.

எமக்­கான தீர்வு இன்­னும் கிடைக்­க­வில்லை. இந்­த­நி­லை­யில் ஆளு­ந­ரின் கருத்து எங்­க­ளுக்கு ஒரு அச்­சு­றுத்­த­லா­கவே இருக்­கி­றது. அவர் ஒன்­றைத் தெரிந்து கொள்ள வேண்­டும். கண்­ண­தா­ச­னின் இன்­னு­மொரு பாட­லும் உள்­ளது. ‘யாரும், இருக்­கும் இடத்­தில் இருந்து கொண்­டால் எல்­லாம் சௌக்­கி­யமே……’. என்று.

எங்­க­ளுக்கு ஒரு தேசிய தலை­வர் இருந்­தால் நாம் படும் வேதனை, கண்­ணீர் எல்­லாம் பதில் சொல்­லும். நடை­பெற்று முடிந்த போர்க் குற்­றங்­கள், காணா­மல் ஆக்­கப்­பட்­டோர், தமிழ் அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம் போன்ற எல்­லா­வற்­றுக்­கும் தீர்வு கிடைக்­கும் வரை­யில் தமிழ் மக்­கள் சுதந்­தி­ர­த்துக்­காக போரா­டு­ப­வர்­களே – –என்­ற­னர்.