Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

மகிந்­த­வின் பொய்­யுரை!!

தலைமை அமைச்­சர் ரணி­லின் பொக்­கற்­றில்­தான் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்பந்­தன் உள்­ளார் என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த யாழ்ப்­பா­ணத்­தில் வைத்­துத் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில், அவ­ரின் குற்­றச்­சாட்­டுக்கு தகுந்த பதி­லடி கொடுத்­துள்­ளார் இரா.சம்­பந்­தன்.

2011ஆம் ஆண்டு அதா­வது மகிந்த அரச தலை­வ­ராகப் பதவி வகித்த காலத்­தில் அர­சுக்­கும் கூட்­ட­மைப்­புக்­கும் இடை­யில் நடை­பெற்ற சந்­திப்­புக்­கள், மகிந்த தலை­மை­யி­லான அரசு தம்மை நடத்­திய, நடந்­து­கொண்­ட­வி­தம் உள்­ளிட்ட பல விட­யங்­களை இரா.சம்­பந்­தன் திரு­கோ­ண­ம­லை­யில் அண்­மை­யில் இடம்­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­ட­மொன்­றில் வைத்து வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

அவர் தனது உரை­யின்­போது, கடந்த 2011ஆம் ஆண்டு அர­சு­டன் நடை­பெற்ற பேச்­சுக்­க­ளின்­போது மகிந்த ஒரு தடவை ‘தெரி­வுக்­கு­ழு­வுக்கு வரா­விட்­டால் உமக்கு ஆபத்து ஏற்­ப­ட­லாம்’ என்று எச்­ச­ரித்­தார் என­வும் சம்­பந்­தன் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

இதன்­மூ­லம் ‘இத்­தனை மிரட்­டல்­கள் எச்­ச­ரிக்­கை­கள் இருந்­தும் உமது பொக்­கற்­றில் விழாத நானா ரணி­லின் பொக்­கற்­றில் விழுந்­து­வி­டப் போகி­றேன்’ என்று தெரி­விக்­கும் வித­மாக கடந்த கால நினை­வு­கள் பல­வற்­றை­யும் தூசு­தட்டி விட்­டுள்­ளார் இரா.சம்­பந்­தன். மகிந்­த­வுக்கு இது புரி­யதோ இல்­லையோ தமிழ் மக்­கள் துல்­லி­யத்­தன்­மை­யு­டன் புரிந்­து­கொள்­வர், பிரித்­த­றிந்து கொள்­வார்­கள்.

மகிந்த யார்? அவர் எப்­ப­டிப்­பட்­ட­வர்? சிறு­பான்­மை­யின மக்­களை எந்த மட்­டத்­தில் வைத்­துள்­ளார் என்­பதை தமிழ் மக்­கள் நன்கு அறி­வர். ஆத­லால் அவர் சம்­பந்­தன் மீது குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­த­போது அவை நகைப்­புக்கு இட­மா­ன­வை­யா­கவே தமி­ழர் தாய­கத்­தால் நோக்­கப்­பட்­டன.

அதி­லும் தீர்வு குறித்து பேச்சு நடத்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு தம்­மால் அழைப்பு விடுக்­கப்­பட்­டது என்­றும் அதைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நிரா­க­ரித்­தது என்­றும் மகிந்த தெரி­வித்­துள்­ளமை பரி­கா­சத்­துக்கு உரி­ய­தொன்று.

ஏனெ­னில், தற்­போ­தைய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ரின் கூட்டு அர­சு­டன் இணைந்து புதி­ய­தொரு அர­ச­மைப்பை உரு­வாக்­கும் முயற்­சி­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கள­மி­றங்­கி­ய­போது, அர­ச­மைப்­பின் உரு­வாக்­கத்­தில் காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை வழங்­கிச் செயற்­பட்­டுக் கொண்­டி­ருந்­த­போது அர­ச­மைப்­புக்கு எதி­ராக இன­வாத முழக்­கங்­களை எழுப்­பி­ய­வர்­க­ளுள் முக்­கி­ய­மா­ன­வர் மகிந்­தவே.

அவ­ரும் அவ­ரது சகாக்­க­ளும் இணக்­கப்­பாட்­டு­டன் இருந்­தி­ருந்­தால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­வைத்த கோரிக்­கை­க­ளு­டன் சிறு­பான்மை இனங்­க­ளுக்­குச் சாத­க­மா­ன­தொரு அர­ச­மைப்பு மலர்ந்தி­ருக்க வாய்ப்­புக்­கள் மிக அதி­கம்.

புதிய அர­ச­மைப்பு உரு­வா­னால், வடக்கு – கிழக்கு இணைந்­தால் மாகா­ணங்­கள் உச்ச அதி­கா­ரத்­தைப் பெற்­றுத் திக­ழும். அது தமி­ழர் தாயக்தை உரு­வாக்­கும். இதற்­கா­கவா எமது சிப்­பாய்­கள் தமது இன்­னு­யி­ரைத் தியா­கம் செய்­த­னர் என்று சிங்­கள் மக்­கள் மத்­தி­யில் உச்­சக்­கட்ட விஷ­மப் பரப்­பு­ரையை மகிந்த முன்­னெ­டுத்­தி­ருந்­தார். இவ்­வா­றான ஒரு­வ­ரின் ஆட்­சி­யில் அவ­ரின் தலை­மை­யில் தமி­ழர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் அல்­லது முன்­வைக்­கப்­ப­டும் தீர்வு எந்­த­ள­வுக்கு நடுவு நிலை­யா­ன­தா­க­வும் தமிழ் மக்­கள் ஏற்­றுக்­கொள்­ளக் கூடிய வகை­யி­லும் இருந்­தி­ருக்­கும்.

ஆக, தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பில்­லாத, தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­யைத் தீர்க்­காத ஒரு தீர்­வுத் திட்­டத்தை அது தொடர்­பான பேச்­சுக்­களை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நிரா­க­ரித்­தா­லும் அது வர­வேற்­கத்­தக்­கதே. தமி­ழர் தாய­கத்­தில் தான்­தோன்­றித்­த­ன­மாக கருத்­துக்­க­ளின் மூலம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை பல­வீ­னப்­ப­டுத்­த­லாம் என்ற எண்­ணப்­பாட்­டில் மகிந்த தொடர்ந்து செயற்­ப­டு­வா­ரா­யின் அது பிற்­போக்­கான சிந்­த­னையே.